13 ஆம் நூற்றாண்டு நடுகல் திருவண்ணாமலையில் கண்டுபிடிப்பு.. வன்னிய நாடாழ்வான் மகன் தொடர்பான விபரம் தெரியவந்தது.! - Seithipunal
Seithipunal


திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள கலசபாக்கம் அருகே 13 ஆம் நூற்றாண்டைச் சார்ந்த கல்வெட்டுகளின் கூடிய நடுகல் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. 

திருவண்ணாமலை மாவட்டத்திலுள்ள கலசபாக்கம் தாலுகா மேல்சோழங்குப்பம் கிராமத்தில் மிருகண்டா நதி இருக்கிறது. இந்த நதிக்கு அருகே உள்ள வனப்பகுதியில் 13 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பாண்டியர் காலத்து கல்வெட்டுகள் இருந்துள்ளது. 

இதுதொடர்பாக தகவல் அறிந்த மாவட்ட வரலாற்று ஆய்வு நடுவத்தை சார்ந்த எம்.சுதாகர், சக்திவேல் மற்றும் சிவா ஆகியோர் சேர்ந்து இதுகுறித்து ஆய்வு மேற்கொண்டனர். இந்த கல்வெட்டு குறித்து தகவல் தெரிவித்த கல்வெட்டு அறிஞர் ராஜகோபால், " இக்கல்வெட்டு விக்கிரம பாண்டியனின் நான்காவது ஆட்சியாண்டில் வெட்டப்பட்டது. 

இது ஜெயவனத்தனிப்பாலை உடையான் அன்னாண்டை என்கிற வன்னிய நாடாழ்வான் மகன் திருமலை சமுத்திரம் என்கிற இடத்தில் இருந்து மாட்டை கவர்ந்து வரும் போது பிரண்டை என்ற இடத்தில் இறந்து போனதாக கூறப்படுகிறது " என்று கூறியுள்ளார். 

மேலும், இந்த கல்வெட்டில் உள்ள வாக்கியங்கள் உள்ளூர் வழக்கில் அமைந்துள்ளது என்றும், வருகையிலேயே என்பதற்கு பதிலாக வருச்சிலேயே என்றும், இறந்துபோனார் என்பதற்கு பதிலாக மீண்டு எய்துகிறார் என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது என்று தெரிவித்தார். 

தொல்லியல் அறிஞர் பூங்குன்றன் கூறுகையில், " கல்வெட்டில் உள்ள வீரனின் உருவம் அம்பை எய்வது போன்ற அமைப்புடன் இருக்கிறது என்றும், இதில் மாட்டின் உருவம் ஏதும் இல்லை என்றும், 17 ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டில் நடுகல் கிடைப்பது மிகவும் அரிதான விஷயம். இந்த கல்வெட்டு அமைந்துள்ள கலசபாக்கம் பகுதியில் மஞ்சு விரட்டு என்ற பண்பாட்டு திருவிழா பண்டைய காலம் முதல் நடைபெற்று வருவதற்கான சான்றாக இது அமைந்துள்ளது என்றும், இது 17 ஆம் நூற்றாண்டைச் சார்ந்ததாக இருக்கலாம் " என்றும் தெரிவித்தார்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tiruvannamalai Ancient history Stone Discovered


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->