108 ஜோடிகளுக்கு இலவச திருமணம்.. போத்தீஸ் நிறுவனத்தின் அதிரடி அறிவிப்பு..! திருமண வரன்களுக்கு நல்ல வாய்ப்பு.! - Seithipunal
Seithipunal


" திருமணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் " என்று சான்றோர்கள் கூறுவார்கள். இன்றைய காலகட்ட பொருளாதார சூழ்நிலையில், திருமணம் என்றால் ஒருபுறம் மகிழ்ச்சி உற்றார்-உறவுகள் வருகைகள் என்று சிறப்புகள் இருந்தாலும், ஏழ்மையில் வாடி வரும் பல குடும்பத்திற்கு அது பெரும் சவாலாக இருக்கிறது. 

அரசு சார்பாகவும், அரசியல் கட்சியின் சார்பாகவும் அல்லது சில முன்னணி நிறுவனங்கள் சார்பாகவும் அவ்வப்போது இலவச திருமணங்கள் மூலமாக பல ஏழை, எளிய ஜோடிகளின் மகிழ்ச்சியான வாழ்க்கை தொடக்கத்திற்கும் ஒளியேற்றி வருகின்றனர். இது பல திருமண ஜோடிகளுக்கு பெரிதும் கை கொடுக்கிறது. 

அந்தவகையில், ஜவுளி உலகில் சிறந்து விளங்கும் போத்தீஸ் நிறுவனம், தற்போது ஒரு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. இதுகுறித்த அறிவிப்பில், போத்தீஸ் நிறுவனம் புதிதாக தங்க நகை கடை தொடங்க உள்ளது உறுதியாகியுள்ளது. தங்கநகைக்கடை திறப்பு விழாவினை முன்னிட்டு இலவச திருமண அறிவிப்புகளை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. 

போத்தீஸ் திரு. ரமேஷ் அவர்கள் சார்பில் வெளியிடப்பட்டுள்ள அந்த செய்திக்குறிப்பில், " போத்தீஸ் நிறுவனம் தங்க நகை வியாபாரத்தில் அடியெடுத்து வைக்கிறது. தங்களின் முதல் நகை கடையை திருநெல்வேலி நகரம் (நெல்லை டவுன்) பகுதியில் அறிமுகம் செய்கிறது. இந்த இனிய தருணத்தில் நெல்லை மற்றும் அண்டை மாவட்ட மக்களுக்கு தனது நன்றியை வெளிப்படுத்தும் பொருட்டு, 108 ஜோடிகளுக்கு இலவச திருமணம் செய்து வைக்கப்படுகிறது. 

வரும் 29 (29/04/2021) ஆம் தேதி 108 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடைபெறுகிறது. திருமணம் திருநெல்வேலியில் உள்ள சாஃப்டர் பள்ளியில் காலை 7:45 மணிக்கு மேல் நடைபெறுகிறது. இதற்கான விண்ணப்பம் வரும் 18 ஆம் தேதிக்குள் போத்தீஸ் நிறுவனத்தின் கீழ் கொடுக்கப்பட்டுள்ள முகவரிக்கு அனுப்ப வேண்டும். 

அனைத்து மதத்தினரும் இருந்து இதற்கான விண்ணப்பங்களை அனுப்பலாம். மணமக்களின் பெற்றோர் சம்மதத்துடன், இந்த விண்ணப்ப படிவத்தை இணைத்து அனுப்ப வேண்டும். அவரவர் மத முறைப்படி திருமணங்கள் நடத்தி வைக்கப்படும். தேர்வு செய்யப்படும் மணமக்களுக்கு 12 கிராம் எடையில் மணப்பெண்ணுக்கு தாலி மற்றும் மணமகனுக்கு மோதிரம் அல்லது மணமகனுக்கும் - மணப்பெண்ணுக்கும் 6 கிராம் எடையில் மோதிரம் வழங்கப்படும். 

அவரவர் முறைப்படி திருமண ஆடைகள், ஸ்டீல் கட்டில், பீரோ, எவர்சில்வர் சீர்வரிசை பொருட்கள் மற்றும் பணமுடிப்பு ஆகிய பரிசுகள் வழங்கப்படுகிறது. அவர்களின் உற்றார் - உறவினர்கள் மற்றும் நண்பர்கள் ஆகியோர் வருகையும் உறுதி செய்யும்பொருட்டு, 20 இலவச பேருந்து பாஸ் வழங்கப்படும். 

விண்ணப்பிக்க வேண்டிய முகவரி:

போத்தீஸ், 
3 வடக்கு ரத வீதி, 
திருநெல்வேலி - 627006.
அலைபேசி எண் : 76038 77882, 63794 56542, 70922 08313.

மேலும், முக்கிய குறிப்பாக தற்போது கொரோனா காலமாக இருப்பதால், திருமணத்திற்கு வரும் திருமண ஜோடிகள் மற்றும் உறவினர்கள் கட்டாயம் மாஸ்க் அணிந்திருக்க வேண்டும் என்றும், கொரோனா வழிகாட்டு விதிமுறைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் " என்றும் அந்த செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது. 

இதன்படி, திருநெல்வேலி மற்றும் அதனை சுற்றியுள்ள விருதுநகர், தூத்துக்குடி, கன்னியாகுமரி ஆகிய மாவட்டங்களைச் சார்ந்த ஜோடிகளுக்கும் வாய்ப்பு அளிக்கப்படுகிறது. இவ்வாறாக பெறப்படும் விருப்பமுள்ள கடிதங்களில், 108 ஜோடிகள் தேர்வு செய்யப்பட்டு அவர்களுக்கு திருமணம் செய்து வைக்கப்படுகிறது. ஏழை, எளிய மக்களின் நிலைமையை கருத்தில் கொண்டு இந்த செயலை முன்னெடுத்துள்ள போத்தீஸ் நிறுவனத்திற்கு வாழ்த்துக்கள். 

தங்களின் மகன்/மகள் திருமணத்தை எப்படியாவது கஷ்டப்பட்டு செய்துவிடலாம் என்று எண்ணிய பெற்றோர்களும், அவர்களின் உறவினர்களும் இந்த செய்தியை பகிர்ந்து, தம்பதிகளின் வாழ்க்கையில் ஒளியேற்ற சிறு தீக்குச்சியாக செயல்படுங்கள் என்று கேட்டுக்கொள்கிறோம். மங்களம் உண்டாகட்டும்.. இந்த செயலை முன்னெடுத்துள்ள போத்தீஸ் நிறுவனத்திற்கும், அதன் பணியாளர்களுக்கும் பாராட்டுக்கள். 

நெல்லை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு இவ்வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. பிற மாவட்டங்களை சார்ந்தவர்கள் திருமணம் செய்ய விருப்பம் இருப்பின், மேலே வழங்கப்பட்டுள்ள எண்ணிற்கு தொடர்பு கொண்டு விபரத்தை கேட்டுக்கொள்ளலாம். 

இதுதொடர்பாக நமது நிறுவனம் சார்பாகவும் தொடர்பு கொண்டு விசாரிக்கப்பட்டது. போத்தீஸ் நிறுவனத்தின் சார்பாக வழங்கப்பட்டுள்ள அறிவிப்பு என்பது உறுதி செய்யப்பட்டது. ஆகவே, திருமணம் செய்ய எண்ணியுள்ள பெற்றோர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

Tamil online news Today News in Tamil

பொது எச்சரிக்கை: தமிழகத்தில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருவதால், முகக்கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை கடைபிடியுங்கள். வெளியே சென்று வீட்டிற்குள் செல்லும் முன்னர் கை, கால்களை சுத்தம் செய்துகொள்ளுங்கள்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Tirunelveli Pothys Announce Free Marriage for 108 Couple with Parents Permission 29 April 2021


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்
Seithipunal