சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்த காவல்துறை வாகனம்: காவல் ஆய்வாளர் உள்ளிட்ட மூன்று பேர் படுகாயம்..! - Seithipunal
Seithipunal


உளுந்தூர்பேட்டை அருகே சாலையோரம் காவல் துறை ஜீப் கவிழுந்த விபத்துக்குள்ளானதில் காவல் ஆய்வாளர் உள்ளிட்ட மூன்று பேர் படுகாயம் அடைந்துள்ளனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் எஸ்.பி அலுவலகத்தில் ஆய்வாளராக பணி புரிந்து வருபவர் இளவரசன். இன்று விழுப்புரத்தில் நடைபெற்ற காவல் துறை கூட்டத்தில் கலந்து கொள்வதற்காக ஜீபில் சென்றுள்ளார்.

கூட்டத்தை முடித்துவிட்டு மீண்டும் விழுப்புரத்தில் இருந்து கள்ளக்குறிச்சிக்கு  வந்துள்ளார்.  அப்போது ஜீபை தலைமை காவலர் சீதாராமன் என்பவர் ஓட்டியுள்ளார். உளுந்தூர்பேட்டை அடுத்த சேந்தமங்கலம் குறுக்கு ரோடு அருகே ஜீப் சென்று கொண்டு இருந்த போது திடீர் என நிலை தடுமாறி சாலையோர பள்ளத்தில் விழுந்து விபத்து ஏற்பட்டுள்ளது.

குறித்த விபத்தில் ஆய்வாளர் இளவரசன், தலைமை காவலர் சீதாராமன் மற்றும் அவருடன் சென்ற காவலர் இளையராஜா உள்ளிட்ட மூவரும்  படுகாயம் அடைந்துள்ளனர். ஜீப் முழுவதும் நொறுங்கி சேதம் அடைந்துள்ளது. உடனடியாக அங்கு இருந்தவர்கள் ஓடி சென்று ஆய்வாளர் இளவரசன் மற்றும் போலீசாரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்துள்ளனர். இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Three people including a police inspector were seriously injured when a police vehicle overturned in a roadside ditch


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->