மூளையை தின்னும் அமீபா பாதிப்பு தமிழகத்தில் உள்ளதா..? மாஸ்க் அணிவது கட்டாயமா..? மா.சுப்பிரமணியன் விளக்கம்
Ma. Subramanian explains about wearing masks in Tamil Nadu
தமிழகத்தில் புதிதாக எந்த நோய் தொற்றும் பரவவில்லை எனவும், மாஸ்க் அணிவது கட்டாயம் போன்ற பதற்றமாமன நிலை எதுவும் இல்லை என சென்னையில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், மூளையை தின்னும் அமீபா பாதிப்பு தமிழகத்தில் இதுவரை யாருக்கும் ஏற்படவில்லை என குறிப்பிட்டுள்ளார். சுகாதாரமற்ற நீர்நிலைகள் மூலம் கேரளாவில் மூளையை தின்னும் அமீபா தொற்று ஏற்படுகிறது என்றும், தமிழகத்தில் தற்போது பருவமழை கால நோய் தொற்று பாதிப்புதான் உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ள அவர், இதனால் பதற்றம் தேவையில்லை என்றும், மூளையை தின்னும் அமீபா பாதிப்பு தமிழகத்தில் இதுவரை யாருக்கும் ஏற்படவில்லை என்று அறிவித்துள்ளார்.
மேலும், நல்லக்கண்ணுவுக்கு அறுவைச் சிகிச்சை மூலம் சுவாசத்தை எளிதாக்கும் கருவி பொருத்தப்பட்டுள்ளது. அவர் மருத்துவர்கள் கண்காணிப்பில் சிகிச்சை பெற்று வருகிறார் என்று கூறியதோடு, ஜி.எஸ்.டி. வரியை பா.ஜ.க. அரசு தான் முன்பு உயர்த்தியது, தற்போது குறைத்ததும் பா.ஜ.க. அரசு தான் என்று பேசியுள்ளார்.
English Summary
Ma. Subramanian explains about wearing masks in Tamil Nadu