'மக்களை ஏமாற்றுவதில் 01 ஆம் நம்பர் கட்சி திமுக: அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டியிலும் கூட ஊழல்': எடப்பாடி பழனிசாமி குற்றச்சாட்டு..! - Seithipunal
Seithipunal


திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டின் போது டோக்கன் சிஸ்டம் கொண்டு வந்துவிட்டதாகவும், திமுகவினருக்கு யார் வேண்டுமோ அவர்களுக்கு டோக்கன் கொடுத்து, பணத்தை வாங்கிக்கொண்டு அதிலும் ஊழல் செய்கின்றனர் என அதிமுக பொதுச்செயலாளர், தமிழக சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமி குற்றம் சுமத்தியுள்ளார்.

'மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்' என்ற தேர்தல் பரப்புரை சுற்றுப்பயணம் வாடிப்பட்டி நடைபெற்றது. அப்போது மக்கள் முன்னிலையில் அவர் பேசியதாவது: விவசாயிகளுக்கு இந்தியாவிலேயே அதிகப்படியான இழப்பீட்டைப் பெற்றுக்கொடுத்தது அதிமுக அரசுதான் என்று கூறியுள்ளார். அத்துடன், திமுக அரசு  விலையில்லா வேட்டி, சேலை திட்டத்திலும் ஊழல் செய்கிறது  என்றும், அதிமுக அரசு அமைத்த உடன் வேட்டி சேலை தரமாகவும் உரிய நேரத்திலும் வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன், தீபாவளி தோறும் பெண்களுக்கு சேலை வழங்கப்படும் என்றும், மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கும் திட்டமும் மீண்டும் அதிமுக ஆட்சி அமைந்ததும் அமல்படுத்தப்படும் என்று குறிப்பிட்டுள்ளார்.

100 நாள் வேலைத்திட்ட தொழிலாளிகளுக்கான சம்பளத்தையே அதிமுக தான் மத்திய அரசிடம் முதற்கட்டமாக ரூ.2999 கோடி பெற்றுக்கொடுத்தது என்று சுட்டிக்காட்டியுள்ளார். தமிழகத்தில் ஆட்சியில் இருப்பது திமுக, ஆனால் நிதி பெற்றுக்கொடுப்பது அதிமுக என்று குறிப்பிட்டுள்ளார். மத்திய அரசு ஜிஎஸ்டியில் பல்வேறு மாற்றங்களை அறிவித்துள்ளது, விவசாயிகளுக்கான டிராக்டர் உள்ளிட்ட பல்வேறு பொருட்கள் விலை குறைந்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.

அத்துடன், டாஸ்மாக் ஊழல் குறித்து அதிமுக ஆட்சியில் இவையெல்லாம் தோண்டியெடுத்து நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதிப்படுத்தியுள்ளார். மேலும், முதலமைச்சர் ஸ்டாலின் திட்டத்தை அறிவிப்பார், பெயர் வைப்பார். பெயர் சூட்டுவதில் மட்டும் சிறந்த முதல்வர் என்று கூறியதோடு, இப்போது உங்களுடன் ஸ்டாலின் திட்டம் அறிவித்துள்ளார் என்று தெரிவித்துள்ளார்.

மக்களின் பிரச்சினையை தீர்க்கத்தான் முதல்வரை தேர்வு செய்வார்கள். ஆனால் இவர் இப்போதுதான் பிரச்சினை இருப்பதையே கண்டுபிடித்திருக்கிறார் என்றும், ஏதேதோ செய்வது போல சொல்வார்கள், ஆனால் நடக்காது, மக்களை ஏமாற்றுவதில் ஒண்ணாம் நம்பர் கட்சி திமுக என்று கடுமையாக சாடியுள்ளார்.

அத்துடன் , மதுரை அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு பாரம்பரியமிக்க முறையில் மீண்டும் நடைபெற நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறியுள்ளார். .திமுக ஆட்சிக்கு வந்த பிறகு அங்கு டோக்கன் சிஸ்டம் கொண்டு வந்துவிட்டனர். அதனால், உள்ளூரில் காளை வளர்த்தவர்களுக்கு எல்லாம் அதில் இடமில்லை. திமுக கட்சிக்காரர்களுக்கு யார் வேண்டுமோ அவர்களுக்கு டோக்கன் கொடுத்து, பணத்தை வாங்கிக்கொண்டு அதிலும் ஊழல் செய்கிறது என்று எடப்பாடி பழனிச்சாமி விமர்சித்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Edappadi Palaniswami alleges that DMK committed token corruption even in the Alanganallur Jallikattu competition


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->