செட்டிநாடு விமான நிலையம் வருமா? வராதா? மத்திய அரசு அறிவித்தும் கைவிடப்படும் நிலை? - Seithipunal
Seithipunal


சிவகங்கை மாவட்டம் காரைக்குடி அருகே உள்ள செட்டிநாடு அரசு கால்நடை பண்ணையில், இரண்டாம் உலகப் போரின் போது அமைக்கப்பட்ட ஓடுதளங்கள் இன்னும் நிலைத்திருக்கின்றன.

தொழில், கல்வி, வெளிநாடு பயணம், திரைப்பட படப்பிடிப்பு ஆகிய காரணங்களால் இப்பகுதிக்கு அடிக்கடி வருவோர் அதிகம் இருப்பதால் விமான நிலையம் தேவைப்படுவதாக மக்கள் நீண்டநாளாக கோரிக்கை விடுத்து வந்தனர்.

2018ல் உடான் திட்டத்தின் கீழ் ஆய்வு நடந்தது. பின்னர் மத்திய பட்ஜெட்டில் செட்டிநாடு உட்பட 5 விமான நிலையங்கள் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது.

அதன்படி அதிகாரிகள் மீண்டும் ஆய்வு செய்தனர். எனினும், தமிழக அரசு தொழில் முதலீட்டு துறை செயலர் அருண்ராய் அனுப்பிய கடிதத்தில், மதுரை, திருச்சி விமான நிலையங்கள் அருகிலேயே உள்ளன. செட்டிநாட்டில் ஓடுபாதை தரம் குறைவாகவும், கட்டிட வசதிகள் இல்லாமையும் காரணமாக விமான நிலையம் அமைப்பது சாத்தியமில்லை என தெரிவித்துள்ளது.

ஆனால், ஓடுதளத்தை மேம்படுத்து விமானிகள் பயிற்சி மையம் அமைக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது. மத்திய அரசு விமான நிலையம் அறிவித்திருந்த போதிலும், தமிழக அரசு மறுத்ததால் காரைக்குடி மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

karaikudi airport announce


கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு



Advertisement

கருத்துக் கணிப்பு

ஜிஎஸ்டி வரி குறைப்பு




Seithipunal
--> -->