சென்னை விமான நிலையத்தில் 3 கிலோ தங்கம் பறிமுதல்.! விசாரணையில் சிக்கிய தனியார் நிறுவன ஊழியர்.!
three kg gold seized chennai airport
சென்னை விமான நிலையத்தில் 3 கிலோ தங்கம் பறிமுதல்.! விசாரணையில் சிக்கிய தனியார் நிறுவன ஊழியர்.!
சென்னை மீனம்பாக்கத்தில் உள்ள பன்னாட்டு விமான நிலையத்தில் வருகை பகுதியில் இருந்து பன்னாட்டு புறப்பாடு பகுதிக்கு மாறக்கூடிய இடத்தில் இருக்கும் கழிவறைக்கு விமான நிலைய தனியார் நிறுவன ஊழியர் ஒருவர் சென்றுள்ளார்.
ஆனால், நீண்ட நேரத்திற்கு பின்பு தான் அவர் வெளியே வந்துள்ளார். இதை பார்த்த அங்கு பணியில் இருந்த மத்திய தொழிற் பாதுகாப்பு படை போலீசார் சந்தேகமடைந்தனர்.

இதையடுத்து போலீசார் விமான ஊழியரை பின் தொடர்ந்து சென்று கண்காணித்து அவரை பாதுகாக்கப்பட்ட இடத்தில் நிறுத்தி விசாரணை செய்தனர். அப்போது அந்த ஊழியர் முன்னுக்கு பின் முரணாக பேசியதால் போலீசார், அவரை பாதுகாப்பு சோதனைக்கு உட்படுத்தினர்.
அந்த சோதனையில், அவர் பெயர் சஞ்சய் என்பதும், அவரது உள்ளாடையில் 3 பிளாஸ்டிக் பாக்கெட்டுகளில் 3 கிலோ 930 கிராம் தங்கத்தை பசை வடிவில் மறைத்து வைத்து இருந்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.
இதனை பறிமுதல் செய்த போலீசார், சுங்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். மேலும், அவரிடம் தீவிர விசாரணையில் ஈடுபட்டு வந்தனர். இந்தச் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
English Summary
three kg gold seized chennai airport