குடிநீரை பருகிய 20கும் மேற்பட்டோருக்கு வாந்தி, மயக்கம்.. மருத்துவமனையில் சிகிச்சை!
Those who drank the contaminated waterover 20are experiencing vomiting and fainting treatment in the hospital
உருளையன்பேட்டையில் சுகாதாரமற்ற குடிநீரை பருகிய 20கும் மேற்பட்டோர் பாதிப்பு ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவருபவர்களை எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா பொதுக்குழு உறுப்பினர் எஸ். கோபால் சந்தித்து ஆறுதல் கூறினர்.
புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட கோவிந்தசாலை பகுதியில் உள்ள முடக்குமுத்து மாரியம்மன் கோவில் வீதி மற்றும் அதனை சுற்றியுள்ள பகுதிகளில் சுகாதாரமற்ற குடிநீரை குடித்த அப்பகுதி மக்களுக்கு வாந்தி, வயிற்றுபோக்கு, மயக்கம் ஏற்பட்டுள்ளது.
இதனால் கடந்த இரு நாட்களாக 15க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு புதுச்சேரி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். இவர்களில் 10 பேர் வீடு திரும்பிய நிலையில் 10பேர் தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர் அவர்களை இன்று 04.08.2025 காலை புதுச்சேரி மாநில திமுக அமைப்பாளரும், சட்டமன்ற எதிக்கட்சித் தலைவருமான திருமிகு. இரா. சிவா அவர்களும் திமுக மாநில தலைமை பொதுக்குழு உறுப்பினரும், உருளையன்பேட்டை தொகுதி பொறுப்பாளருமான திரு. எஸ். கோபால் அவர்களும் அரசு மருத்துவமனைக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆறுதல் கூறி நிவாரணம் வழங்கினார்.

பின்னர் பொதுப்பணி துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டு உடனடியாக அப்பகுதிக்கு சென்று பார்வையிட்டு நிலைமையை சரி செய்யுமாறு கேட்டுக்கொண்டார்.
English Summary
Those who drank the contaminated waterover 20are experiencing vomiting and fainting treatment in the hospital