உன் அண்ணன், தங்கையை பாரு... கதறிய தாய்... செங்கல் சூளையில் கல் சுமந்து படிக்க வைத்ததற்கு சிறப்பான சம்பவம்.! - Seithipunal
Seithipunal


தாய் கதறி அழுதும் அவரை கண்டு கொள்ளாது காதலனின் கைகளை கூட பிடியில் இருந்து விட மறுத்து, அவனுடனே சென்ற கல்லூரி காதல் திருமண சம்பவம் நடைபெற்றுள்ளது. 

தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள சாத்தான்குளம் அஞ்சு கிராமத்தைச் சார்ந்தவர் பவித்ரா. இவர் நர்சிங் கல்லூரியில் மாணவியாக பயின்று வந்த நிலையில், செல்போனில் அதிக நேரம் பேசிக் கொண்டு இருந்துள்ளார். இது குறித்து வீட்டார் விசாரித்த போது, தனது நண்பரிடம் பாடம் சம்பந்தமாக சந்தேகம் கேட்பதாக சமாளித்து இருக்கிறார். 

இந்நிலையில், பவித்ரா கல்லூரியில் பயிலும் மாணவர் ஒருவரை காதலித்து வந்தது தெரிய வந்துள்ளது. இதனையடுத்து, ஆத்திரமடைந்த பவித்ராவின் தாய், அவரிடம் இருந்து செல்போனை பறித்துள்ளார். சம்பவத்தன்று பவித்ரா வீட்டிலிருந்து மாயமாகியுள்ளார். 

தனது மகளை காணவில்லை என பவித்ராவின் தாயார் சாத்தான்குளம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கவே, தான் காதலித்து வந்த புதுக்குளம் பகுதியை சார்ந்த மாணவன் பீமாராவ் என்பவரின் கையை இறுக்கமாக பற்றிக் கொண்டு காவல் நிலையத்திற்கு வந்துள்ளார். 

காவல் நிலையத்தில், " நாங்கள் இருவரும் மேஜர், தங்களின் விருப்பப்படி திருமணம் செய்துகொள்ள சட்டமே இருக்கிறது " என்று தாயிடம் கூறி அதிர வைத்துள்ளார். மாணவியின் அண்ணன் என்ன சொல்வது என்று தெரியாமல், மனம் நொந்து தலைகுனிந்தபடி அருகிலிருக்க, பவித்ராவின் தாய் தனது செல்போனை உன்னிடம் கொடுத்து விடுகிறேன், நீ எவ்வளவு நேரம் வேண்டுமானாலும் பேசு, படிப்பு முடிந்தவுடன் அவனையே திருமணம் செய்து.

இருவரும் ஒரே சமுதாயம் என்பதால் திருமணத்திற்கு பிரச்சனை இல்லை. நானே படிப்பு முடிந்ததும் திருமணம் செய்து வைக்கிறேன் என்று பக்குவமாக எடுத்து கூறியும், அதை ஏற்றுக்கொள்ளாது பவித்ரா இருந்துள்ளார். காதல் கண்ணை மறைத்து தாயின் வார்த்தைகள் செவியில் சேராமல், காதலனின் கையை இறுக பற்றியவாறு காவல் நிலையத்திற்குள் சென்று, நாங்கள் இருவரும் மேஜர், எங்களுக்கு திருமணம் செய்ய அதிகாரம் உள்ளது. எனது தாயை விட்டு விலகிச்செல்ல சொல்லுங்கள் என்றும் பரபரப்பாக பேசியுள்ளார். 

இதனால் மனவேதனை அடைந்த பவித்ராவின் தாய் இளம் பெண்ணின் சகோதரர் மற்றும் மூன்று சகோதரிகளுக்கு திருமணம் ஆகாமல் உள்ளது என்றும், உனது கல்லூரி படிப்பிற்காக வாங்கிய கடன் ரூபாய் 5 இலட்சத்திற்கு நான் கடனாளி என்றும், உனது அண்ணன் 36 வயதாகியும் இன்னும் திருமணம் செய்து கொள்ளாமல் இருக்கும் நிலையில், அவர் வாழ்க்கை முடங்கிவிட்ட நிலையில், நீ இப்படி பண்ணிவிட்டாய் என்றும், செங்கல் சுமந்து வட்டிக்கு கடன் வாங்கி உன்னை படிக்க வைத்ததற்கு, இதுதான் என் நிலையா? கதறி அழுதார். 

இதனை சற்றும் காதில் கேட்க கூட தயாராக இல்லாத பவித்ரா, இறுதியில் காவல் அதிகாரிகளிடம் வாக்குமூலம் அளித்துவிட்டு காதலருடன் சென்றார். சொந்த ஜாதி காதலோ அல்லது வேறு ஜாதி காதலோ 18 வயதுக்கு கீழ் அல்லது கல்லூரிகளில் படிக்கும் சமயத்தில் வரும் காதல், சில வருடங்களில் எத்தனை மாற்றங்களை சந்தித்துள்ளது என்பதை தமிழகமே அறியும். அதுபோல இந்த காதல் காவியம் எங்கு சென்று கரைசேர போகிறது என்பதற்கு அவர்களின் வாழ்க்கை முறையில்தான் பதில் இருக்கிறது.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thoothukudi Sathankulam Love Couple girl Mother cry


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்
Seithipunal