திருமணம் முடிந்த மகிழ்ச்சியில் குடி.. மணப்பெண்ணின் தந்தைக்கு துடிதுடிக்க அரங்கேறிய சோகம்.! 
                                    
                                    
                                   Thoothukudi Ottapidaram man Murder by His Friend with Broken Bear Bottle Police Arrest 
 
                                 
                               
                                
                                      
                                            ஓட்டப்பிடாரம் அருகே திருமண வீட்டில் ஏற்பட்ட தகராறில், மணமகளின் தந்தையை அவரின் நண்பர் குத்திக் கொலை செய்த சம்பவம் அரங்கேறியுள்ளது. 
தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள ஓட்டப்பிடாரம் புளியமரத்தடி கிராமத்தைச் சார்ந்தவர் செந்தூரன். இவரது மகன் சண்முகராஜ் (வயது 43). இவரது மகளுக்கு அதே கிராமத்தில் வெள்ளிக்கிழமை திருமணம் நடைபெற்று முடிந்தது. 
திருமணம் முடிந்த பின்னர் சண்முகராஜ் தனது நண்பரான இமானுவேல் என்பவருடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார். இதன்போது ஏற்பட்ட தகராறு காரணமாக ஆத்திரமடைந்த இமானுவேல், அருகே இருந்த பீர் பாட்டிலை உடைத்து சண்முகராஜை குத்தியுள்ளார். 

இதனால் பலத்த காயமடைந்த சண்முகராஜ் உயிருக்கு போராடிய நிலையில், அவரை மீட்ட உறவினர்கள் தூத்துக்குடி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால், மருத்துமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார். 
இந்த விஷயம் தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ள புதியம்புதூர் காவல்துறையினர், இமானுவேலை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும், சம்பவம் நடந்த ஊரில் பரபரப்பு ஏற்பட்டு உள்ளதால், பதற்றத்தை தணிக்க கூடுதல் காவல் துறையினரும் குவிக்கப்பட்டுள்ளனர்.
Tamil online news Today News in Tamil
                                     
                                 
                   
                       English Summary
                       Thoothukudi Ottapidaram man Murder by His Friend with Broken Bear Bottle Police Arrest