11-ம் தேதி திருச்சியில் மாபெரும் NDA பொதுக்கூட்டம்! - பங்கேற்க வருகிறார் பிரதமர் மோடி...! - Seithipunal
Seithipunal


2026-ஆம் ஆண்டு நடைபெற உள்ள தமிழக சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அரசியல் அரங்கம் தீவிரமாகி வருகிறது. தேர்தல் தேதி விரைவில் அறிவிக்கப்படும் என்ற எதிர்பார்ப்பால் மாநிலம் முழுவதும் அரசியல் கட்சிகள் களமிறங்கி தங்களது பிரசார நடவடிக்கைகளை வேகப்படுத்தி வருகின்றன.

ஆளும் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியை எதிர்த்து ஆட்சியை கைப்பற்ற வேண்டும் என்ற நோக்கத்தில் அ.தி.மு.க.–பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி தீவிர தேர்தல் திட்டங்களுடன் செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில் பிரதமர் நரேந்திர மோடி மற்றும் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் தொடர்ந்து தமிழகம் வந்து பொதுக்கூட்டங்கள் மற்றும் கட்சி நிகழ்ச்சிகளில் பங்கேற்று ஆதரவு திரட்டிக் கொண்டிருக்கிறார்கள். கடந்த வாரம் புதுச்சேரி மற்றும் திருப்பரங்குன்றத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டங்களில் பிரதமர் மோடி கலந்துகொண்டு உரையாற்றியது அரசியல் வட்டாரத்தில் பெரும் கவனத்தை ஈர்த்தது.

தொடர்ச்சியாக வருகிற 11-ந்தேதி பிரதமர் மோடி மீண்டும் தமிழகம் வர உள்ளார். திருச்சி பஞ்சப்பூரில் நடைபெறவுள்ள அரசு நிகழ்ச்சி மற்றும் தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரமாண்ட பொதுக்கூட்டம் இந்த வருகையின் முக்கிய அம்சங்களாக அமைந்துள்ளன.

அன்றைய தினம் மாலை 4.30 மணியளவில் டெல்லியில் இருந்து விமானம் மூலம் திருச்சி விமான நிலையம் வரும் பிரதமர், அங்கிருந்து ஹெலிகாப்டரில் பஞ்சப்பூருக்கு செல்கிறார். முதலில் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் மற்றும் தேசிய நெடுஞ்சாலை ஆணையம் சார்பில் நடைபெறும் அரசு விழாவில் பங்கேற்று நிறைவு பெற்ற திட்டங்களை திறந்து வைத்து, புதிய வளர்ச்சி திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி உரையாற்றுகிறார்.

இதனைத் தொடர்ந்து அருகில் அமைக்கப்பட்டுள்ள பிரமாண்ட மேடையில் நடைபெறும் தேசிய ஜனநாயக கூட்டணியின் பொதுக்கூட்டத்தில் கலந்து கொண்டு பிரதமர் மோடி அரசியல் உரையாற்றுகிறார்.

கூட்டணி கட்சிகளின் தலைவர்கள் மற்றும் ஆயிரக்கணக்கான தொண்டர்கள் இதில் பங்கேற்க உள்ளனர். இந்த பொதுக்கூட்டம் மாலை 6.30 மணி முதல் 7.30 மணி வரை நடைபெற ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.இந்த நிகழ்ச்சிகள் அனைத்தையும் முடித்த பிறகு எடமலைப்பட்டி புதூர் வழியாக கார் மூலம் திருச்சி விமான நிலையத்திற்கு செல்லும் பிரதமர், அங்கிருந்து விமானம் மூலம் டெல்லி திரும்புகிறார்.பிரதமர் வருகையை முன்னிட்டு திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் விரிவான முன்னேற்பாடு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

கலெக்டர் சரவணன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் மாநகர போலீஸ் கமிஷனர் காமினி, மாநகர பொறியாளர் சிவபாதம், பா.ஜ.க. மாநகர் மாவட்ட தலைவர் ஒண்டிமுத்து உள்ளிட்ட அதிகாரிகள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொண்டு பாதுகாப்பு ஏற்பாடுகள், போக்குவரத்து ஒழுங்கு, பொதுமக்கள் மற்றும் கட்சி தொண்டர்கள் பங்கேற்பு உள்ளிட்ட பல்வேறு ஏற்பாடுகள் குறித்து ஆலோசனை நடத்தினர்.

தேர்தல் சூழல் நாளுக்கு நாள் தீவிரமடைந்து வரும் நிலையில் பிரதமர் மோடியின் திருச்சி வருகை, பா.ஜ.க.–அ.தி.மு.க. கூட்டணி தொண்டர்களிடையே உற்சாகத்தையும் அரசியல் சூட்டையும் மேலும் அதிகரித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Big NDA public meeting Trichy 11th Prime Minister Modi coming participate


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!


செய்திகள்



Seithipunal
--> -->