ஈரான் தாக்குதல் தோல்வி! - 78 ஏவுகணைகள், 143 டிரோன்களை சாய்த்த பஹ்ரைன் பாதுகாப்புப் படை...!
Iran attack fails Bahrain security forces shoot down 78 missiles 143 drones
அமெரிக்கா-இஸ்ரேல் கூட்டணிப் படைகள் ஈரானை குறிவைத்து தீவிர தாக்குதல்களை மேற்கொண்டு வரும் நிலையில், அதற்கு பதிலடி கொடுக்க ஈரான் வளைகுடா நாடுகளை நோக்கி ஏவுகணைகள் மற்றும் டிரோன் தாக்குதல்களை தொடர் முறையில் நடத்தி வருகிறது.

இந்த தாக்குதல்களின் பட்டியலில் பஹ்ரைனும் இடம் பெற்றுள்ளது. தங்கள் நாட்டை குறிவைத்து ஈரான் நடத்திய தாக்குதலை “நம்பிக்கைக்கு துரோகம்” என பஹ்ரைன் கடுமையாக கண்டித்துள்ளது.
இந்நிலையில், ஈரான் ஏவிய 78 ஏவுகணைகள் மற்றும் 143 டிரோன்களை தங்கள் பாதுகாப்பு அமைப்புகள் வெற்றிகரமாக தடுத்துச் சாய்த்ததாக பஹ்ரைன் பாதுகாப்புப் படை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
English Summary
Iran attack fails Bahrain security forces shoot down 78 missiles 143 drones