6,000 ஏக்கர் நெல் பயிர்கள் கருகும் நிலை..தண்ணீர் இல்லாமல் குமுறும் விவசாயிகள்.!!
Thiruvarur Farmers distressed 6000 acres crops are dying without water
ஆண்டுதோறும் தமிழ்நாட்டில் குறுவை சாகுபடிக்காக ஜூன் 12ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து காவிரி நீர் திறந்து விடுவது வழக்கம். அந்த வகையில் நடப்பாண்டும் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் நேரில் சென்று மேட்டூர் அணையிலிருந்து குறுவை சாகுபடிக்காக தண்ணீர் திறந்து விட்டார்.
முதலமைச்சர் திறந்துவிட்ட தண்ணீர் பெரும்பாலான டெல்டா மாவட்டங்களுக்கு சென்றடையாத நிலை நீடிக்கிறது. இதனை நம்பி குறுவை சாகுபடி செய்த பல்லாயிரக்கணக்கான விவசாயிகள் பெரும் நஷ்டம் அடைந்துள்ளனர்.

குறிப்பாக முன்னாள் முதல்வர் கருணாநிதியின் சொந்த மாவட்டமான திருவாரூர் மாவட்டத்தின் கடைமடை பகுதிகளுக்கு தண்ணீர் கிடைக்காததால் சுமார் 6000 ஏக்கர் நெற்பயிர்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக விவசாயிகள் குமுறுகின்றனர். திருவாரூர் மாவட்டத்தில் மட்டும் சுமார் 80 ஆயிரம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டுள்ளது.
கடைமடை பகுதியான கருப்புக்கிளார் உள்ளிட்ட பகுதிகளுக்கு முறையாக தண்ணீர் கிடைக்காததால் பயிர்கள் கருகி வருவதாக விவசாயிகள் வேதனையுடன் தெரிவித்தனர். எனவே தமிழக அரசு அதிகாரிகள் மற்றும் வேளாண் துறை அதிகாரிகள் உரிய ஆய்வு நடத்தி நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தி உள்ளனர்.
English Summary
Thiruvarur Farmers distressed 6000 acres crops are dying without water