தம்பி மனைவியின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடிய அண்ணன்... சந்தேகத்தால் அரங்கேறிய சோகம்.! - Seithipunal
Seithipunal


திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள கடம்பத்தூர் குமாரச்சேரி கிராமத்தை சார்ந்தவர் யோவான் (வயது 25). இவரது சகோதரர் ஏசான் (வயது 22). இவர்கள் இருவரும் கூலித்தொழிலாளியாக பணியாற்றி வந்த நிலையில், ஏசான் மது மற்றும் கஞ்சா பழக்கம் உடையவர். 

இதனால் மனநலம் பாதிக்கப்பட்டது போல அவ்வப்போது இருந்து வருவார் என்றும் கூறப்படுகிறது. இந்நிலையில், நேற்று சகோதரர்கள் இருவரும் வீட்டில் இருந்த நேரத்தில், ஏசான் திடீரென வைத்திருந்த கத்தியை எடுத்து யோவானின் தலை மற்றும் கழுத்து பகுதியில் சரமாரியாக வெட்டியுள்ளார்.

இதில், நிலைகுலைந்துபோன யோவான், இரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இந்த விஷயம் தொடர்பாக தகவல் அறிந்த காவல் துறையினர், யோவானின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். மேலும், ஏசானை கைது செய்து விசாரணை செய்துள்ளனர். 

இதன்போது ஏசான் அளித்த வாக்குமூலத்தில் கூறப்பட்டுள்ளதாவது, " நெல்லூரில் உள்ள துணிக்கடையில் நான் (ஏசான்) பணியாற்றிய போது, அனுஷா என்பவரை காதலித்து 2 வருடத்திற்கு முன்னதாக திருமணம் செய்தேன். நாங்கள் இருவரும் மேலூரில் வசித்து வந்த நிலையில், யோவான் பெயின்டிங் வேலை செய்து வந்தார். 

பின்னர், கடந்த மார்ச் மாதம் குமாரசேரிக்கு வந்து தங்கிய நிலையில், கடந்த மாதம் யோவான் என் மனைவியின் ஊருக்கு சென்று, அவரின் பிறந்தநாளில் கேக் வாங்கிக்கொடுத்து வெட்டவைத்து கொண்டாடினர். இதனால் எனக்குள் எழுந்த சந்தேகம் தொடர்ந்து அதிகரித்து வந்த நிலையில், அண்ணனை கொலை செய்தேன் " என்று தெரிவித்துள்ளார். இதனையடுத்து ஏசானை கைது செய்த காவல் துறையினர் சிறையில் அடைத்துள்ளனர்.

Tamil online news Today News in Tamil


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

Thiruvallur Brother murder by Younger Brother Police Investigation


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் கொரோனா பரவல் அதிகரித்ததற்கான காரணம்
Seithipunal