கள்ளச்சாராயம் வியாபாரிகளுடன் கள்ள தொடர்பு வைத்திருந்த நான்கு போலீசாருக்கு ஆப்பு!
Thirupattur 4 police transferred
திருப்பத்தூர் அருகே கள்ளச்சாராயம் வியாபாரிகளுடன் கள்ள தொடர்பில் இருந்த நான்கு போலீசாரை ஆயுதப் படைக்கு மாற்றி நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
கள்ளச்சார வியாபாரிகளுடன் தொடர்பில் இருந்த வட்டார காவல் நிலைய சிறப்பு உதவி காவல் ஆய்வாளர் சிவாஜி, வெண்ணிலா, ஏட்டு வசந்தா மற்றும் வாணியம்பாடி மதுவிலக்கு அமல் பிரிவை சேர்ந்த கோபி ஆகியோரை ஆயுதப் படைக்க மாற்றி திருப்பத்தூர் எஸ் பி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
ஆயுதப் படைக்கு மாற்றப்பட்டுள்ள இந்த நான்கு போலீசாரும் கள்ளச்சார வியாபாரிகள் கள்ளச்சாராயம் காய்ச்சுவதற்கு பணம் பெற்றுள்ளனர்.

மேலும், கள்ளச்சாராயத்தை விற்பனை செய்வதற்கு ஆதரவாகவும் செயல்பட்டு, பணம் வாங்கியிருப்பதாக புகார் எழுந்த நிலையில், தற்போது எஸ் பி இந்த நடவடிக்கை எடுத்துள்ளார்.
இதில் பெரும் அதிர்ச்சியான தகவல் ஒன்றும் உள்ளது. கள்ளச்சாராய ஒழிப்புக்கு எதிராக தமிழக போலீசார் மேற்கொண்டு வந்த நடவடிக்கைகளை, கள்ளச்சார வியாபாரிகளுக்கு தகவல் கொடுத்து வந்ததாகவும் இவர்கள் மீது குற்றம் எழுந்த நிலையில், தற்போது இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
தவறு செய்தவர்கள் யாராக இருந்தாலும், இனி கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் திருப்பத்தூர் எஸ் பி ஆல்பட் ஜான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
English Summary
Thirupattur 4 police transferred