திண்டுக்கல் : சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வாலிபருக்கு 32 ஆண்டுகள் சிறை.!
thirty two years jail penalty to man for sexuall harassment case
திண்டுக்கல் : சிறுமிக்கு பாலியல் தொல்லை அளித்த வாலிபருக்கு 32 ஆண்டுகள் சிறை.!
நாடு முழுவதும் பாலியல் வன்கொடுமை அதிகரித்துள்ளது. அதிலும் குறிப்பாக 14 வயதிற்கு மேல் 18 வயதிற்குட்பட்ட சிறுமிகள் இளைஞர்களின் சட்ட விரோத ஆசைக்குட்பட்டு சீரழிகின்றனர். இதனை தடுப்பதற்காக அரசு பல முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றது.

இந்த நிலையில், திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள தும்பிச்சி பாளையம் பகுதியைச் சேர்ந்த முருகேசன் என்பவர் கடந்த 2020-ம் ஆண்டு பதினான்கு வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்.
இந்த தகவலை பாதிக்கப்பட்ட சிறுமி பெற்றோரிடம் தெரிவித்ததைத் தொடர்ந்து இந்த சம்பவம் தொடர்பாக அவர்கள் போலீசில் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரின் பேரில் போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்து முருகேசனை கைது செய்தனர்.

மேலும், இந்த சம்பவம் தொடர்பான வழக்கு விசாரணை திண்டுக்கல் மாவட்டம் விரைவு மகிளா நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில், இந்த வழக்குத் தொடர்பான விசாரணை நேற்று நடைபெற்றது.
அப்போது நீதிபதி, "சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை செய்த குற்றவாளி முருகேசனுக்கு 32 வருட சிறைத்தண்டனையும், பதினைந்தாயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டார்.
English Summary
thirty two years jail penalty to man for sexuall harassment case