தேனி | போலீசாரால் கைப்பற்றப்பட்ட வாகனங்கள் ஏலம்! தேதி அறிவிப்பு! - Seithipunal
Seithipunal


தேனி, உத்தமபாளையம் வருவாய் கோட்டங்களுக்கு உட்பட்ட காவல் நிலையங்களில் கடந்த 2014 ஆம் ஆண்டு முதல் 2022 ஆம் ஆண்டு வரை போலீசாரால் கைப்பற்றப்பட்ட உரிமை கோரப்படாத வாகனங்கள் அரசுக்கு ஆதாயம் செய்யும் வகையில் ஏலம் விட்டு விற்பனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. 

தேனி காவல்துறை மையத்தில் சம்பந்தப்பட்ட வட்டாட்சியர் அலுவலகங்களில் ஒப்படைக்கப்பட்ட 20ஆம் தேதி காலை 11 மணி அளவில் ஏலம் விடப்படும். 

ஏலத்திற்கு வருபவர்கள் ரூ. 1000 முன்பணம் செலுத்தி ஏலம் தேதிக்கு முன் ரசிது பெற்றுக் கொள்ள வேண்டும். அதிக தொகைக்கு ஏலம் கேட்பவருக்கு வாகனங்கள் வழங்கப்படும். 

ஏலம் கேட்பவர்கள் ஏலத்தகையுடன் சேர்த்து 18 சதவீதம் ஜி.எஸ்.டி வரியும் செலுத்த வேண்டும். வாகன ஏலம் உறுதிப்படுத்தும் குழுவினரால் உறுதி செய்யப்பட்ட பிறகே வாகனங்கள் ஏலதாரிடம் ஒப்படைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

theni police seized vehicles Auction


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->