கடைக்குள் சிகிரெட் பிடிக்க கூடாது என கூறிய பணியாளர்... கடையை அடித்து உடைத்த இளைஞர்கள்..! - Seithipunal
Seithipunal


சிகிரெட் பிடிக்க அனுமதி மறுத்ததால் இளைஞர்கள் கடையை அடித்து உடைத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

சிவகங்கை மாவட்டம், மானாமதுரை ரோட்டில் பேக்கிரி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்த கடைக்கு சிகிரெட் வாங்குவதற்காக இளைஞர் சிலர் வந்திருந்தனர். அப்போது , சிலர் கடைக்குள்ளேயே சிகிரெட் பிடித்துள்ளனர். இதனை கண்ட கடையின் பணியாளர் சதீஷ் என்பவர் அவர்களை வெளியில் செல்ல்லுமாறு கூறினார்.

ஆனால், அவர்களை அதனை கண்டுகொள்ளாமல் கடைகுள்ளாகவே சிகிரெட் பிடித்துள்ளனர். இதனால், சதீஷூக்கும் இளைஞர்களுக்கும் இடையில் வாக்குவாதம் ஏற்பட்டது. ஒரு கட்டத்தில்வாக்குவாதம் முற்றவே சதீஷை தாக்கிய அவர்கள் கடையில் உள்ள பொருட்களை அடித்து உடைத்துள்ளனர்.

இதில் பலத்தகாயமடைந்த சதீஷை மீட்டு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். இந்த சம்பவம் குறித்து தகவலறிந்து வந்த காவல்துறையினர் வழக்குபதிவு செய்து அங்குள்ள சிசிடிவி காட்சிகளை கொண்டு விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The youths who broke into the shop


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->