கணவனை கொன்று பிணத்துடன் இரவு முழுவதும் அமர்ந்திருந்த மனைவி! - Seithipunal
Seithipunal


கணவரை மனைவி கொலை செய்த சம்பவம் நெய்வேலியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

கடலூர் மாவட்டம் நெய்வேலி இந்திரா நகர் ஊராட்சி  5-வது தெருவில் வசித்து வந்தவர் ஓய்வு பெற்ற என்.எல்.சி.ஊழியர் கொளஞ்சியப்பன்,இவரது மனைவி பத்மாவதி .இருவரும் வேறொருவருடன் திருமணம் ஆகி பிரிந்தவர்கள்.

இதையடுத்து கடந்த 20 ஆண்டுகளுக்கு முன்புகொளஞ்சியப்பனுக்கும் பத்மாவதிக்கும்  திருமணம் நடந்தது. இவர்களுக்கு ஓரு மகன் மற்றும் மகள் உள்ளனர். 

கொளஞ்சியப்பனுக்கும் பத்மாவதிக்கும் அடிக்கடி குடும்ப தகராறு இருந்து வந்துள்ளது. குறிப்பாக பத்மாவதிக்கு கொளஞ்சியப்பன் மீது சந்தேகம் இருந்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு கூட கொளஞ்சியப்பனுக்கு வேறு பெண்ணுடன் தொடர்பு உள்ளதாக கூறி நெய்வேலி மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார்.

இதனை தொடர்ந்து இருவருக்கும் அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்தநிலையில் கொளஞ்சியப்பன் நள்ளிரவில் தனது வீட்டில் படுத்து தூங்கி கொண்டிருந்த போது பத்மாவதி தனது கணவனை கத்தியால் கழுத்தை அறுத்தார். இதில் அவர் சம்பவ இடத்திலே உயிர் இழந்தார்.

பின்னர் காலையில் தனது உறவினருக்கு போன் செய்து தனது கணவனை கொன்று விட்டதாக கூறியதையடுத்து உறவினர் அங்கு வந்து பார்த்தபோது கொளஞ்சியப்பன் ரத்த வெள்ளத்தில் இறந்து கிடந்தது தெரியவந்தது . இது குறித்து நெய்வேலி போலீசில் புகார் செய்ததையடுத்து  நெய்வேலி டி.எஸ்.பி. ராதாகிருஷ்ணன், இன்ஸ்பெக்டர் வீரமணி ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர்.

கணவரை கொலை செய்த பத்மாவதியை போலீசார் பிடித்து விசாரணை நடத்தினார்கள். பின்னர் அவரை கைது செய்தனர். கணவரை மனைவி கொலை செய்த சம்பவம் நெய்வேலியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The wife who sat all night with the corpse after killing her husband


கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!



Advertisement

கருத்துக் கணிப்பு

அரை நிர்வாண கார்ட்டூன்! வரம்பு மீறி செல்கிறதா திமுக-அதிமுகவின் மோதல்?!




Seithipunal
--> -->