பெற்ற தாயை கொடூரமாக.. கட்டையால் அடித்துக்கொன்ற மகன்.! நாகப்பட்டினத்தில் பரபரப்பு.!
The son arrested for murder mother in nakapattinam
நாகப்பட்டினம் மாவட்டத்தில் பெற்ற தாயை மகன் கட்டையால் அடித்துக்கொன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
நாகப்பட்டினம் மாவட்டம் வேதாரணியம் அருகே வாட்டாக்குடி நடுத்தெரு பகுதியை சேர்ந்தவர் முருகானந்தம் (37). இவரது மனைவி வனிதா. இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். இந்நிலையில் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக கடந்த 6 வருடங்களாக இருவரும் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இதையடுத்து தாய் பானுமதியுடன் (65) முருகானந்தம் வசித்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் மதுபோதையில் வீட்டிற்கு வந்த முருகானந்தம் மனைவி பிரிந்தது தொடர்பாக தாயுடன் பேசி தகராறில் ஈடுபட்டுள்ளார். இதில் தகராறு முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த முருகானந்தம், தாயை சரமாரியாக கட்டையால் அடித்துள்ளார்.
இதில் சம்பவ இடத்திலேயே தாய்பானுமதி பரிதாபமாக உயிரிழந்தார். இதையடுத்து இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் உயிரிழந்த பானுமதியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் அடித்துக்கொன்ற மகனை கைது செய்து சிறையில் அடைத்தனர்.
English Summary
The son arrested for murder mother in nakapattinam