விபத்துக்குள்ளான ராணுவ ஹெலிகாப்டர்... கருப்பு பெட்டியை தேடும் பணி தீவிரம்..! - Seithipunal
Seithipunal


விபத்துக்குள்ளான ராணுவ ஹெலிகாப்டரின் கருப்பு பெட்டியை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

கோயம்புத்தூர் மாவட்டம், சூலூர் விமான படை தளத்தில் இருந்து குன்னூர் ராணுவ பயிற்சி பள்ளிக்கு முப்படை தளபதி பிபின் ராவத் மற்றும் 13 ராணுவ வீரர்களுடன் சென்றார். குன்னூர் அருகே காட்டேரி மலைபாதையில் பயணித்த போது ஹெலிகாப்டர் விழுந்து நொறுங்கியது.

ஹெலிகாப்டர் தீப்பிடித்து எரிந்த நிலையில், அங்கிருந்த மக்கள் மீட்பு பணியில் ஈடுப்பட்டனர். தகவலறிந்து விரைந்து வந்த மீட்பு படையினர் மீட்பு பணியில் ஈடுப்பட்டனர். இந்த விபத்தில் முப்படை ராணுவ தளபதி பிபின் ராவத் மற்றும் அவரது மனைவி 13  ராணுவ வீரர்கள் மரணமடைந்தனர்.

இன்று அவர்களின் உடல் டெல்லிக்கு எடுத்து செல்லப்படுகிறது. இந்நிலையில், இந்த விபத்து எப்படி நடைபெற்றது என விசாரணை நடைபெற்று வரும் நிலையில், ஹெலிகாப்டரின் கருப்பு பெட்டியை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

விபத்து நடந்த இடத்தில் இருந்து 200 மீட்டர் சுற்றளவில் கருப்பு பெட்டியை தேடி வருகின்றனர். தற்போது டிரான்ஸ்பார்மர்கள் செயல் இழந்ததாக தகவல் தெரிவிக்கின்றனர். இருப்பினும் கருப்பு பெட்டியை தேடும் பணியை தீவிரப்படுத்தியுள்ளனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன்TELEGRAM இல் பெறுவதற்கு இந்த லிங்கை கிளிக் செய்யவும்... https://t.me/seithipunal


English Summary

The search for the black box of the military helicopter is in full swing


கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?



Advertisement

கருத்துக் கணிப்பு

தமிழகத்தில் தேர்தல் ஆணையத்தின் செயல்பாடு திருப்திகரமாக உள்ளதா?




Seithipunal
--> -->