#திருவண்ணாமலை || அரசு அலுவலகத்தில் தேசிய கொடி தலைகீழாக ஏற்றப்பட்டதால் பரபரப்பு.!! - Seithipunal
Seithipunal


இந்தியா தனது 77வது சுதந்திர தினத்தை இன்று கொண்டாடுகிறது. ஆங்கிலேயர்களிடமிருந்து விடுதலை பெற்று 77 ஆண்டுகள் நிறைவுற்ற நிலையில் டெல்லியில் உள்ள செங்கோட்டையில் பிரதமர் நரேந்திர மோடி தேசிய கொடியை ஏற்றி நாட்டு மக்களிடம் உரையாற்றினார். 

அதேபோன்று சென்னை கொத்தளத்தில் தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் தேசிய கொடியை ஏற்றி மரியாதை செலுத்தினார். இதே போன்ற நாடு முழுவதும் உள்ள அனைத்து அரசு அலுவலகங்கள் கட்சிய அலுவலர்களில் தேசியக் கொடி ஏற்றி மரியாதை செலுத்தப்படுகிறது.

அந்த வகையில் திருவண்ணாமலை மாவட்டம் செங்கம் வட்டாட்சியர் அலுவலகத்தில், 77வது சுதந்திர தினவிழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த நிலையில் இன்று காலை அரசு அலுவலர்கள் முன்பு தேசிய கொடி தலைகீழாக ஏற்றப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

இதனைக் கண்ட அதிகாரிகள் உடனடியாக தேசியக்கொடியை இறக்கி மீண்டும் நேராக ஏற்றினர். சுதந்திர தினத்தன்று இது போன்ற சம்பவங்கள் அரங்கேறுவது தொடர்கதையாகி வருகிறது. முன்னதாக கும்பகோணத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் திமுக எம்எல்ஏ சாக்கோட்டை அன்பழகன் தேசிய கொடி ஏற்றிய போது தேசிய கொடி அறுந்த விழுந்ததால் அருகில் இருந்தவரை அடிக்கப் பாய்ந்த சம்பவம் சர்ச்சையை கிளப்பியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The national flag was hoisted upside down in thiruvannamalai


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->