12 மற்றும் 10 -ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பரிசு வழங்கிய MLA!
The MLA awarded prizes to the 12th and 10th grade students
புதுச்சேரி மாநில உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட 12- ஆம் வகுப்பு 10 -ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவ மாணவிகளை ஊக்குவிக்கும் விதமாக நேரு MLA பரிசுகளை வழங்கினார்..
புதுச்சேரி மாநில உருளையன்பேட்டை தொகுதிக்குட்பட்ட 12- ஆம் வகுப்பு 10 -ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவ மாணவிகளை ஊக்குவிக்கும் விதமாக உருளையன்பேட்டை தொகுதி சட்டமன்ற உறுப்பினரும் புதுச்சேரி மாநில மனிதநேய மக்கள் சேவை இயக்க நிறுவனத் தலைவருமான திரு.G.நேரு(எ)குப்புசாமி MLA அவர்கள் பரிசுகளை வழங்கினார்..
உருளையன்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட கோவிந்தசாலை பாரதிபுரம் மெயின் ரோடு,பள்ளிக்கூடம் மெயின் ரோடு,பள்ளிக்கூடம் முதல் குறுக்கு விதி,பகத்சிங் வீதி, கருணாநிதி வீதி,சகாயமாதா பாடசாலை வீதி,
பாரதிதாசன் வீதி மற்றும் முடக்கு மாரியம்மன் கோவில் வீதி போன்ற பகுதிகளில் உள்ள 12- ஆம் வகுப்பு
மற்றும்10- ஆம் வகுப்பு பொது தேர்வில் தேர்ச்சி அடைந்த அனைத்து மாணவ மாணவிகளுக்கும் ஊக்குவிக்கும் விதமாக பரிசுகளை வழங்கினார்..
மேலும் பரிசுகளை வழங்கும்போது மாணவ மாணவிகளிடம் பேசும் போது இது போன்ற இன்னும் மேன்மேலும் படித்து சிறந்த மதிப்பெண்கள் பெற்று பயிலும் பள்ளிக்கும் பெற்றோர்களுக்கும் புதுச்சேரி மாநிலத்துக்கும் நற்பெயரை பெற்று தர மாணவ மாணவிகளை வாழ்த்தினார்.
மேலும் பரிசு வழங்கும் நிகழ்ச்சியின் போது உருளையன்பேட்டை தொகுதியை சேர்ந்த மனிதநேய மக்கள் சேவை இயக்க பிரமுகர்கள், நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்
English Summary
The MLA awarded prizes to the 12th and 10th grade students