தலைக்கேறிய போதை ..வாலிபரை குத்திக்கொன்று விட்டு சுயநினைவின்றி கிடந்த நண்பர்!
The intoxication that raised his head the friend who lay unconscious after stabbing the young man!
நண்பர் இறந்துவிட்டார் என்பது கூட தெரியாமல் அவரது பிணத்தின் மீது போதையில் சாய்ந்து கிடந்தது விசாரணையில் அம்பலமானது.
குமரி மாவட்டம் வெள்ளிச்சந்தை அருகே கண்ணமங்கலம் பகுதியில் உள்ள ஒரு தோப்பில் வாலிபர் ஒருவர் ரத்த காயங்களுடன் கிடந்தார். இதனை பார்த்த அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சி அடைந்து போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
உடனே வெள்ளிச்சந்தை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து ரத்த காயங்களுடன் கிடந்தவரை மீட்டு ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்ல நடவடிக்கை மேற்கொண்டனர். ஆனால் அவர் கத்திக்குத்து காயத்துடன் இறந்து கிடந்தது தெரியவந்தது. அப்போது அங்கு நிதானமின்றி கிடந்த வாலிபரையும் எழுப்பி பார்த்தபோது அவன் சுயநினைவுக்கு வரவில்லை.
இதையடுத்து வாலிபர் கொல்லப்பட்டுள்ளார் என்ற விவரத்தை போலீசார் உறுதி செய்தனர். மேலும் கொல்லப்பட்டவர் ராஜாக்கமங்கலம் வடலிவிளை பகுதியை சேர்ந்த விஜயகுமாரின் மகன் பரத்என்பதும், போதையில் கிடந்தவர் அவரது நண்பரான மணவாளக்குறிச்சி திருநயினார்குறிச்சி பகுதியை சேர்ந்த தொழிலாளியான அனீஷ் என்பதும் தெரிய வந்தது.
இவர்கள் தன்னுடைய நண்பரான அனீஷ்உள்பட 6 பேர் சம்பவத்தன்று கண்ணமங்கலம் பகுதியில் உள்ள ஒரு தோப்பில் கோழிக்கறி சமைத்து சாப்பிட்டும், மதுகுடித்தபடியும் உற்சாகமாக இருந்துள்ளனர். இந்த மதுவிருந்தில் போதை தலைக்கேறிய அனீஷ், நண்பர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டதாக தெரிகிறது. அப்போது அனீஷ், கறி வெட்ட பயன்படுத்திய கத்தியை எடுத்து யாரும் எதிர்பாராத நேரத்தில் திடீரென பரத்தை குத்தினார் என்பது தெரியவந்துள்ளது.
அனீஷ் நண்பர் இறந்துவிட்டார் என்பது கூட தெரியாமல் அவரது பிணத்தின் மீது போதையில் சாய்ந்து கிடந்தது விசாரணையில் அம்பலமானது.
English Summary
The intoxication that raised his head the friend who lay unconscious after stabbing the young man!