கொடூரம்! 2 பெண் குழந்தைகளை கடலில் வீசிக்கொன்ற கொடூர தந்தை! - Seithipunal
Seithipunal


விழுப்புரம் : மரக்காணத்தில் பெற்ற 2 பெண் குழந்தைகளை கடலில் வீசி தந்தை கொலை செய்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

மரக்காணம் அருகே கூனி மேடு மீனவ கிராமத்தை சேர்ந்தவர் ஆனந்த வேலு. இவர் தற்போது புதுவை மாநிலம் காலப்பட்டு பகுதியில் உள்ள சுனாமி குடியிருப்பில் தனது குடும்பத்துடன் வசித்து வருகிறார்.

ஆனந்த வேலுக்கு அவரது மனைவி கௌசல்யாவிற்கும் கடந்த வாரம் குடும்ப பிரச்சனை ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் ஆத்திரம் அடைந்த அனந்தவேலு தனது குழந்தை ஜோதிகா மற்றும் ஒன்றரை வயது பெண் குழந்தை சஸ்மிதா ஆகியோரை அழைத்துக் கொண்டு கூனிமேடு குப்பத்திற்கு கடந்த பத்தாம் தேதி வந்துள்ளார்.

நேற்று மதியம் இரண்டு குழந்தைகளையும் அழைத்துக் கொண்டு வெளியே சென்றுள்ளார். வெகு நேரம் ஆகியும் வீடு திரும்பவில்லை. மனைவியை பார்க்க சென்று இருக்கலாம் என்று உறவினர்கள் நினைத்து இருந்ததாக கூறப்படுகிறது.
கடற்கரைப் பகுதியில் கரை ஒதுங்கி கிடந்த இரண்டு குழந்தைகளைக் கண்டு அப்பகுதி மக்கள் அதிர்ச்சி அடைந்து உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளனர்.

சம்பவ இடத்திற்கு விரைந்த மரக்காணம் போலீசார் இரண்டு பெண் குழந்தைகளின் உடலையும் கைப்பற்றி பிரத பரிசோதனைக்காக புதுவை மாநிலத்தில் உள்ள பிம்ஸ் மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இறந்து கிடந்த குழந்தைகள் ஆனந்தவேலின் பெண் குழந்தைகள் என தெரியவந்துள்ளது. உடனடையாக அவரது செல்போன் எண்ணிற்கு தொடர்பு கொண்ட பொது செல்போன் சுவிட்ச் ஆஃப் செய்யப்பட்டு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.

குடும்ப பிரச்சினை காரணமாக ஆனந்தவேல் தனது இரண்டு குழந்தைகளையும் கடலில் வீசி அவரும் தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது பெண் குழந்தைகளை கடலில் வீசி கொலை செய்து விட்டு அவர் தலைமறை ஆக்கிவிட்டாரா? என்பது குறித்து காவல்துறை தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ஒரே குடும்பத்தை சேர்ந்த இரண்டு பெண் குழந்தைகளை  தந்தை கடலில் வீசி கொலை செய்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

The father killed his 2 stillborn daughters by throwing them into the sea


கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...



Advertisement

கருத்துக் கணிப்பு

பாஜக, காங்கிரஸ் கட்சியின் தமிழக தலைவர்கள் மாற்றம் குறித்த செய்தி...




Seithipunal
--> -->