வெறும் 27 திரையரங்குகள்: சிறு படங்களுக்கு தடைகள் தொடரில் தமிழ் சினிமா மெல்ல சாகும் ...! - சுரேஷ் காமாட்சி வேதனை
only 27 theaters available Tamil cinema slowly dying continuing obstacles faced by small films Suresh Kamatchi expresses anguish
இயக்குநர் கிட்டு இயக்கத்தில், வி ஹவுஸ் புரொடக்ஷன் சார்பில் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தயாரித்துள்ள திரைப்படம் ‘சல்லியர்கள்’. இந்த படத்தில் சத்யாதேவி, மகேந்திரன், கருணாஸ், மோகன் உள்ளிட்டோர் நடித்துள்ளனர்.
ஜனவரி 1ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக வேண்டிய இப்படத்திற்கு போதிய தியேட்டர்கள் கிடைக்காததால், திரையரங்கு வெளியீட்டை நிறுத்தி நாளை நேரடியாக ஓடிடியில் வெளியிட முடிவு செய்துள்ளதாக தயாரிப்பாளர் அறிவித்துள்ளார்.

இதுதொடர்பாக சுரேஷ் காமாட்சி தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,“வெறும் 27 திரையரங்குகள் மட்டுமே கிடைத்த நிலையில் படத்தை வெளியிட முடியாத சூழல் ஏற்பட்டது.
எந்த பெரிய படமும் வெளியாகாத நாளிலும், சிறு படங்களுக்கு தியேட்டர் மறுப்பது நவீன தீண்டாமை போன்றது. குறிப்பாக பிவிஆர் போன்ற கார்ப்பரேட் தியேட்டர்கள் ஒரு திரையரங்குகூட வழங்கவில்லை” என கடும் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
மேலும்,“ஈழத் தமிழர்களின் போராட்டத்தை மையமாக கொண்ட, தமிழ் மக்களுக்கான படம் என்பதாலேயே இப்படம் புறக்கணிக்கப்படுகிறதா? பெரிய படங்களுக்கு மரியாதை; சிறு படங்களுக்கு புறக்கணிப்பு. இப்படியே சென்றால் தமிழ் சினிமாவின் எதிர்காலம் கேள்விக்குறியாகிவிடும்” எனவும் தெரிவித்துள்ளார்.
“இன்று எனக்கு நடந்தது, நாளை இன்னொரு தயாரிப்பாளருக்கும் நடக்கலாம். படம் ஓடுமா இல்லையா என்பதை தீர்மானிக்க தியேட்டர் உரிமையாளர்கள் யார்?” என கேள்வி எழுப்பிய அவர், தயாரிப்பாளர்கள் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்றும் அழைப்பு விடுத்துள்ளார்.
இறுதியாக,‘சல்லியர்கள்’ திரைப்படம் OTT PLUS தளத்தில் வெளியாக உள்ளது. உலகம் முழுவதும் உள்ள தமிழர்கள் இப்படத்தை பார்த்து ஆதரிக்க வேண்டும் என கேட்டுக்கொண்டுள்ளார்.
English Summary
only 27 theaters available Tamil cinema slowly dying continuing obstacles faced by small films Suresh Kamatchi expresses anguish