புகார் அளித்தும் நடவடிக்கை எடுக்காத அதிருப்தி; தமிழ்நாடு 'காவல்துறையில் பாஜகவின் செல்வாக்கு அதிர்ச்சியளிக்கிறது'; காங்கிரஸ் ஜோதிமணி காட்டம்..! - Seithipunal
Seithipunal


பா.ஜ.க மாவட்டத் தலைவர் செந்தில்நாதன், கரூரில் நடந்த கட்சி நிகழ்ச்சி ஒன்றில், காங்கிரஸ் எம்.பி. ஜோதிமணி குறித்து  ஆபாசமாகவும், அவதூறாகவும் கருத்து தெரிவித்ததாக புகார் எழுந்தது. இதற்கு அக்கட்சியின் முன்னாள் மாநிலத்தலைவர் அண்ணாமலையும் கண்டனம் தெரிவித்திருந்தார்.

இது குறித்து தான் புகார் அளித்தும் தற்போதுவரை கரூர் காவல்துறை அவர்மீது நடவடிக்கை எடுக்கவில்லை, செந்தில்நாதன்  அவர்களுக்கு ஆதரவாகதான் காவல்துறை செயல்படுவதாக ஜோதிமணி தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளதாவது;

"கரூர் மாவட்ட காவல்துறையின் செயல்பாடு வெட்ககேடானது. ஒரு பெண்ணை, நாடாளுமன்ற உறுப்பினரை பொதுவெளியில் ஆபாசமாக பேசிய பாஜக மாவட்ட தலைவரை வேண்டுமென்றெ கைது செய்யாமல் விட்டு வைத்து, குற்றவாளி முன் ஜாமின் பெறுவதற்கு மறைமுகமாக உறுதுணையாக இருந்துள்ளனர்.

பாஜகவின் கைப்பாவையாக காவல்துறை செயல்படுகிறது என்பது வெட்ட வெளிச்சமாகத் தெரிகிறது. தமிழ்நாட்டு மக்கள் வரிப்பணத்தில் ஊதியம் பெற்றுக்கொண்டு பாஜகவிற்கு அடிபணிந்து சேவகம் செய்வதற்கு எதற்கு ஒரு காவல்துறை? இதில் எந்த பொறுப்பும் தமிழ்நாடு அரசிற்கு கிடையாதா? இப்படித்தான் பெண்களைப் பாதுகாப்பதா?

அரசியல் தலையீடு இல்லாமல் இது நிச்சயம் நடந்திருக்க முடியாது. பெண்களைப் பாதுகாப்பதற்குப் பதிலாக குற்றவாளிகளைப் பாதுகாக்கிற இந்த காவல்துறையின் கீழ் மிக நிச்சயமாக பெண்கள் பாதுகாப்பாக இருக்க முடியாது. தமிழ்நாடு காவல்துறையில் பாஜகவிற்கு இருக்கும் செல்வாக்கு அதிர்ச்சியளிக்கிறது." எனக் குறிப்பிட்டுள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Congress leader Jyotimani says BJPs influence in Tamil Nadu police is shocking


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




சினிமா

Seithipunal
--> -->