தமிழகத்தில் பெண் வாக்காளர்கள் 51% அதிகரிப்பு; சென்னையிலும் ஆண்களை மிஞ்சிய பெண்கள் ..! - Seithipunal
Seithipunal


தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் திருத்தத்திற்கு பின்னரான இறுதி வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் ஆண் வாக்காளர்கள் இரண்டு கோடி, 77 லட்சத்து, 38 ஆயிரத்து 925 பேர் ஆகும். பெண் வாக்காளர்கள் இரண்டு கோடியே, 89 லட்சத்து, 60 ஆயிரத்து 838 பேர் ஆகும்.

அதன்படி, மொத்த வாக்காளர்கள் 05 கோடியே 67 லட்சத்து, 7 ஆயிரத்து 380 பேர்கள் ஆகும். இந்த பட்டியலின் படி,பெண் வாக்காளர்கள் 51 சதவீதம் . இது கடந்த 2021-ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலை விட அதிகமாகும். 

அதாவது கடந்த 2021 சட்ட மன்ற தேர்தலில், 3.09 கோடி ஆண் வாக்காளர்கள் இருந்த நிலையில், 3.19 கோடி பெண் வாக்காளர்கள் இருந்தனர். இது மொத்த வாக்காளர்களில் 50.7 சதவீதம் ஆகும். இதில், ஆண்- பெண் வாக்காளர்கள் இடையிலான வித்தியாசம் 10.15 லட்சமாக இருந்தது. ஆனால், தற்போது அது 12.21 லட்சமாக அதிகரித்துள்ளது. இது 51.07 சதவீதமாகும்.

இதிலும், குறிப்பாக, சென்னையில் பெண் வாக்காளர்கள் எண்ணிக்கை 14.64 லட்சமாகுவும், ஆண் வாக்காளர்கள் 13.64 லட்சமாகவும் உள்ளனர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Female voters increase by 51percentage in Tamil Nadu


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




சினிமா

Seithipunal
--> -->