ஜனநாயகன் சென்சார் விவகாரம்: சென்சாரில் இருக்கும் 4 பேர் சொல்வதை கேட்கணுமா? குரல் கொடுக்க வேண்டும் - விஷால்! - Seithipunal
Seithipunal


தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் 2026–2029 ஆண்டுகளுக்கான நிர்வாகிகளைத் தேர்வு செய்யும் தேர்தல் சென்னை அண்ணா நகரில் உள்ள கந்தசாமி நாயுடு கல்லூரியில் இன்று நடைபெற்றது. மூன்றாண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும் இந்தத் தேர்தலில் தலைவர், 2 துணைத் தலைவர்கள், 2 செயலாளர்கள், 1 பொருளாளர், 1 இணைச் செயலாளர் மற்றும் 26 செயற்குழு உறுப்பினர்கள் என மொத்தம் 33 பதவிகளுக்காக 100 பேர் போட்டியிட்டுள்ளனர்.

இம்முறை இராம நாராயணன் அணி மற்றும் ‘நலம் காக்கும்’ அணி என இரண்டு அணிகள் களமிறங்கியுள்ளன. காலை 8 மணி முதல் வாக்குப்பதிவு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. ரஜினிகாந்த், கார்த்திக் ராஜா, கே.எஸ். ரவிகுமார், டி.ராஜேந்தர், குஷ்பு, சுஹாசினி, பவர் ஸ்டார், தேவயானி உள்ளிட்ட பலர் வாக்களித்தனர்.

இந்த நிலையில், நடிகரும் தயாரிப்பாளருமான விஷால் வாக்களித்த பின் செய்தியாளர்களிடம் பேசியார். அப்போது ‘ஜனநாயகன்’ திரைப்படம் தொடர்பான பிரச்சனை குறித்து கருத்து தெரிவித்த அவர், “ஒருவர் மட்டும் சென்று குரல் கொடுப்பதால் பலன் இல்லை. 1519 தயாரிப்பாளர்களும் ஒன்றாகச் சென்று சென்சார் போர்டு அலுவலகம் முன்பு நின்று உரிய முறையில் கோரிக்கை வைக்க வேண்டும். அதற்காகத்தான் யார் வென்றாலும், தோற்றாலும் அனைவரும் இணைந்து செயல்பட வேண்டும் என நான் சொல்கிறேன். அப்படி செய்தால் தமிழ் சினிமா மேலும் செழிக்கும்,” என்றார்.

மேலும், “ஜனநாயகன் படத்தை தயாரித்த நிறுவனம் தயாரிப்பாளர் சங்கத்தை அணுகியிருந்தால் ஒருவேளை தீர்வு கிடைத்திருக்கலாம். ஆனால், விவகாரம் உயர்நீதிமன்றத்தில் இருக்கும் நிலையில் நீதிபதியை நாம் கேள்வி கேட்க முடியாது. சென்சார் போர்டு ஒரு முக்கிய வாரியம் தான். ஆனால் ஏழு கோடிக்கும் மேற்பட்ட மக்களைக் கொண்ட நாட்டில், நான்கு அல்லது ஐந்து பேர் அமர்ந்து மக்கள் என்ன பார்க்க வேண்டும், பார்க்கக் கூடாது என்று தீர்மானிப்பது குறித்து எனக்கு உடன்பாடு இல்லை. இருப்பினும் அது விதிமுறை என்பதால் அதன்படி செயல்பட வேண்டிய நிலை உள்ளது,” என தெரிவித்தார்.

விஷாலின் இந்த கருத்து தயாரிப்பாளர் சங்கத் தேர்தல் சூழலில் முக்கிய கவனத்தை ஈர்த்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Janyayan censor issue Do you want to listen to what the 4 people on the censor board have to say You should speak up Vishal


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!


செய்திகள்



Seithipunal
--> -->