உக்ரைன் மீது 126 டிரோன்கள் மற்றும் பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவி தாக்கிய ரஷியா; 04 பேர் பலி; 26 பேர் காயம்..! - Seithipunal
Seithipunal


இன்று உக்ரைன் மீது, ரஷியா 126 டிரோன்கள் மற்றும் ஒரு பாலிஸ்டிக் ஏவுகணையை ஏவி தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இதில், உக்ரைனின் வான் பாதுகாப்புப் படை 105 ட்ரோன்களைச் சுட்டு வீழ்த்திய நிலையில், ஏனைய 20 ட்ரோன்களும் ஏவுகணையும் 11 இடங்களில் தாக்கியுள்ளன. இதில் குறைந்தது 04 பேர் கொல்லப்பட்ட நிலையில், மற்றும் 26 பேர் காயமடைந்துள்ளதாக உக்ரைன் செய்திகள் தெரிவிக்கின்றன.

குறிப்பாக, உக்ரைனின், ஒடெசா, ஜபோரிஜியா, கெர்சன்,டொனெட்ஸ்க், நிப்ரோபெட்ரோவ்ஸ்க், கார்கிவ், சுமி ஆகிய நகரங்களின் குடியிருப்பு பகுதிகள் மற்றும் உள்கட்டமைப்புகள் மீது ரஷ்யா இந்த தாக்குதல் நடத்தியுள்ளது.

இதற்கு முன்னதாக நேற்று ரஷிய தலைநகர் மாஸ்கோவின் விமான நிலையங்களை குறிவைத்து 10 டிரோன்களை உக்ரைன் ஏவிய நிலையில், அவை ரஷ்யா படையால் இடைமறிக்கப்பட்டு அழிக்கப்பட்டன.

இதனால் மாஸ்கோவில் தாற்காலிகமாக விமான நிலையங்கள் மூடப்பட்டு பின் செயல்பாட்டுக்கு வந்துள்ளன.
அத்துடன் நேற்று முன் தினம் நாள் ரஷியா நடத்திய தாக்குதலில் 10 பேர் கொல்லப்பட்டனர். இதற்கு உக்ரைன் பதிலடியாக அந்த தாக்குதல் மேற்கொண்டதாக கூறப்படுகிறது. 
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Russia launches 126 drones and ballistic missiles into Ukraine killing 4


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




சினிமா

Seithipunal
--> -->