இல்லத்தரசிகளுக்கு அடித்தது மெகா ஜாக்பாட்...! மளமளவென சரிந்து சவரனுக்கு ரூ.1 லட்சத்தை நோக்கி வரும் தங்கம் விலை...! - Seithipunal
Seithipunal


இந்த ஆண்டின் தொடக்கம் முதலே தங்கம் விலை ஏற்ற இறக்கங்களுடன் பொதுமக்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக, ஜனவரி மாதத்தில் தங்கம் புதிய உச்சத்தை எட்டிய நிலையில், ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.13 ஆயிரத்து 450-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 7 ஆயிரத்து 600-க்கும் விற்பனையானது.

அதன்பின் விலை சற்று சரிவை சந்தித்தாலும், மீண்டும் உயர்வும் தாழ்வும் மாறிமாறி பதிவானது. மார்ச் 23-ஆம் தேதி ஒரு கிராம் தங்கம் ரூ.13 ஆயிரத்து 340-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 6 ஆயிரத்து 720-க்கும் விற்பனையாகியது.இதனைத் தொடர்ந்து மீண்டும் வேகமாக உயர்ந்த தங்கம் விலை, இந்த மாத தொடக்கத்தில் புதிய உச்சத்தை எட்டியது.

ஜூன் 1-ஆம் தேதி ஒரு கிராம் ரூ.14 ஆயிரத்து 500-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 16 ஆயிரத்துக்கும் விற்பனை செய்யப்பட்டு சந்தையை பரபரப்பாக்கியது.ஆனால் அதன் பின்னர் தங்கம் விலையில் தொடர்ந்து சரிவு நிலவி வருகிறது. குறிப்பாக கடந்த சில நாட்களாக விலை வீழ்ச்சி வேகம் அதிகரித்துள்ளது.

நேற்று முன்தினம் ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 560-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 8 ஆயிரத்து 480-க்கும் விற்பனையான நிலையில், நேற்று கிராமுக்கு ரூ.210 மற்றும் சவரனுக்கு ரூ.1,680 குறைந்து, ஒரு கிராம் ரூ.13 ஆயிரத்து 350-க்கும், ஒரு சவரன் ரூ.1 லட்சத்து 6 ஆயிரத்து 800-க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இன்று தங்கம் விலையில் மேலும் கணிசமான சரிவு பதிவாகியுள்ளது. ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு மேலும் ரூ.1,680 குறைந்து, ஒரு சவரன் ரூ.1,05,120-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதேபோல், கிராமுக்கு ரூ.210 சரிந்து, ஒரு கிராம் ரூ.13,140-க்கு விற்பனையாகி வருகிறது.

கடந்த 11 நாட்களில் மட்டும் தங்கம் விலை கிராமுக்கு ரூ.930-மும், சவரனுக்கு ரூ.7 ஆயிரத்து 440-மும் குறைந்திருப்பது நகை வாங்க திட்டமிட்டுள்ளவர்களுக்கு சற்று நிம்மதியை அளித்துள்ளது.தங்கத்தைப் போலவே வெள்ளி விலையும் தொடர்ந்து சரிவை சந்தித்து வருகிறது.

இன்று வெள்ளி விலை கிராமுக்கு ரூ.10 குறைந்து, ஒரு கிராம் ரூ.230-க்கும் விற்பனை செய்யப்படுகிறது. கிலோவுக்கு ரூ.10 ஆயிரம் குறைந்து, ஒரு கிலோ வெள்ளி ரூ.2 லட்சத்து 30 ஆயிரமாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.தொடர்ச்சியாக சரிந்து வரும் தங்கம் விலை, நகை வாங்க திட்டமிட்டிருக்கும் மக்களிடையே அதிக கவனத்தை ஈர்த்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Housewives hit mega jackpot Gold prices falling slowly and approaching 1 lakh per sovereign


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->