செயல்படாத ஆலையில் திடீர் வெடிச்சத்தம்...! சிவகாசி அருகே பயங்கர விபத்து...! - 3 பேர் படுகாயமடைந்ததன் பின்னணி என்ன...?
sudden explosion non functioning plant terrible accident near Sivakasi What background behind serious injuries 3 people
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே உள்ள செங்கமலப்பட்டியில் அமைந்துள்ள பிரில்லியன்ட் பட்டாசு ஆலையில் இன்று திடீர் வெடி விபத்து ஏற்பட்டது. இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.

பல ஆண்டுகளாக செயல்பாடின்றி மூடப்பட்டிருந்த இந்த பட்டாசு ஆலையின் வளாகத்திற்குள் சிலர் சென்றதாக தெரிவிக்கப்படுகிறது. அப்போது அவர்கள் புகைபிடித்தபோது வீசப்பட்ட தீப்பொறி, அங்கு குவிந்து கிடந்த கழிவுப் பட்டாசுகளில் பற்றியதால் கணநேரத்தில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கப்படுகிறது.
இந்த திடீர் விபத்தில் ஹரி பாரத், சுபாஷ் மற்றும் மாரிச் செல்வம் ஆகிய 3 பேர் காயமடைந்தனர். வெடிச்சத்தம் கேட்டு அதிர்ச்சியடைந்த அப்பகுதி மக்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று காயமடைந்தவர்களை மீட்டனர்.
பின்னர் அவர்கள் சிவகாசி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் காவலர்களும் தீயணைப்புத்துறையினரும் விரைந்து சம்பவ இடத்துக்கு சென்று மீட்பு மற்றும் ஆய்வு பணிகளில் ஈடுபட்டனர்.
வெடி விபத்து எவ்வாறு ஏற்பட்டது? பாதுகாப்பு விதிமுறைகள் மீறப்பட்டனவா? சம்பவத்துக்கு பின்னால் வேறு காரணங்கள் உள்ளனவா? என்ற பல்வேறு கோணங்களில் காவலர்கள் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
English Summary
sudden explosion non functioning plant terrible accident near Sivakasi What background behind serious injuries 3 people