'ஆதாரங்களை வச்சு மிரட்டினான்'...! எப்ஸ்டீனின் பிடியில் சிக்கிய பில் கேட்ஸ்...? - 3 ரகசிய உறவுகளை ஒப்புக்கொண்ட உலகப் பணக்காரர்...!
He threatened give evidence Bill Gates caught Epstein clutches world richest man admits 3 secret relationships
சிறுமிகள் மற்றும் இளம்பெண்களை பாலியல் சுரண்டலுக்காக கடத்தி செல்வந்தர்களிடம் அனுப்பியதாக குற்றச்சாட்டுகளால் உலகம் முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய மறைந்த பாலியல் குற்றவாளி ஜெப்ரி எப்ஸ்டீன் தொடர்பான புதிய தகவல்கள் மீண்டும் அதிர்ச்சி அலைகளை கிளப்பியுள்ளன.
இந்த விவகாரத்தில், உலகப் புகழ்பெற்ற தொழிலதிபர் பில் கேட்ஸ் பெயர் மீண்டும் சர்ச்சையின் மையப்புள்ளியாக மாறியுள்ளது.ஜெப்ரி எப்ஸ்டீனுடன் பில் கேட்ஸ் நெருக்கமாக இருந்ததைக் காட்டும் புகைப்படங்கள் மற்றும் ஆவணங்கள் வெளியானதைத் தொடர்ந்து, பல்வேறு கேள்விகள் மீண்டும் எழுந்துள்ளன.

குறிப்பாக, எப்ஸ்டீன் மற்றும் பல பெண்களுடன் கேட்ஸ் இருந்த புகைப்படங்கள் வெளியாகியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.பில் கேட்ஸின் தனிப்பட்ட வாழ்க்கையைச் சுற்றிய சர்ச்சைகள் ஏற்கனவே பேசுபொருளாக இருந்த நிலையில், அவருக்கு இருந்த பல திருமணத்திற்கு புறம்பான உறவுகளே 2021-ஆம் ஆண்டு மெலிண்டா கேட்ஸுடன் ஏற்பட்ட விவாகரத்திற்கான முக்கிய காரணங்களில் ஒன்றாக இருந்ததாக பரவலாக பேசப்பட்டது.
இந்நிலையில், எப்ஸ்டீன் ஆவணங்களை அடிப்படையாகக் கொண்டு ஜூன் 10-ஆம் தேதி அமெரிக்க பிரதிநிதிகள் சபை மேற்பார்வைக் குழு நடத்திய இரகசிய விசாரணையில் பில் கேட்ஸ் பல முக்கிய தகவல்களை பகிர்ந்ததாக தெரிவிக்கப்படுகிறது.தனது சாட்சியத்தில், திருமண வாழ்க்கைக்கு வெளியே மூன்று பெண்களுடன் உறவு இருந்ததை பில் கேட்ஸ் ஒப்புக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
அதில், ரஷ்யாவைச் சேர்ந்த பிரிட்ஜ் விளையாட்டு வீராங்கனை மிலா அன்டோனோவா மற்றும் அணு இயற்பியலாளர் கரிமா நிக்மதுலினா ஆகியோருடன் தொடர்பு இருந்ததாகவும், இந்த உறவுகள் குறித்து எப்ஸ்டீனுக்கு தெரிந்திருந்ததாகவும் கூறியுள்ளார்.அதேபோல், தொழில்முனைவோர் ஆலிஸ் ஜேக்கப்ஸ் நெசல்ரோட்டுடனும் தனிப்பட்ட உறவு இருந்ததை அவர் ஏற்றுக்கொண்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
எனினும், இந்த உறவுகளுக்கும் எப்ஸ்டீனுடனான சந்திப்புகளுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை என்று பில் கேட்ஸ் திட்டவட்டமாக மறுத்துள்ளார். மேலும், எப்ஸ்டீனின் குற்றச்செயல்களுடன் தனக்கு எந்தவித தொடர்பும் இல்லை என அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.மேலும், “எனது தனிப்பட்ட தவறுகளை அடிப்படையாகக் கொண்டு, பொய்களையும் உண்மைகளையும் கலந்து கூறி என்னை மீண்டும் தொடர்பில் வைத்திருக்க எப்ஸ்டீன் முயன்றார்” என பில் கேட்ஸ் தெரிவித்ததாக கூறப்படுகிறது.
அதேசமயம், எப்ஸ்டீன் நேரடியாக தன்னை மிரட்டவில்லை என்றும், ஆனால் அவரது நடவடிக்கைகள் மறைமுக அழுத்தத்தை ஏற்படுத்தும் வகையிலேயே இருந்ததாக தான் கருதுவதாகவும் கேட்ஸ் கூறியுள்ளார்.தொண்டு முயற்சிகளுக்காக செல்வந்தர்களை அறிமுகப்படுத்துவதாக கூறியதாலேயே எப்ஸ்டீனை சந்திக்க நேர்ந்ததாக பில் கேட்ஸ் விளக்கம் அளித்துள்ளார்.
கடந்த நான்கு ஆண்டுகளில் எப்ஸ்டீனை 12 முதல் 14 முறை நேரில் சந்தித்ததாகவும், இருமுறை காணொளி அழைப்புகள் மூலம் உரையாடியதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், அண்மையில் வெளியான சில ஆவணங்களில் தனக்கு பால்வினை நோய் இருப்பதாகவும், அதற்காக ரகசியமாக சிகிச்சை பெற்றதாகவும் இடம்பெற்ற குற்றச்சாட்டுகளை பில் கேட்ஸ் முழுமையாக மறுத்துள்ளார்.இந்த புதிய தகவல்கள் வெளியாகியுள்ள நிலையில், ஜெப்ரி எப்ஸ்டீன் விவகாரம் மீண்டும் உலகளவில் கடும் விவாதத்தை கிளப்பியுள்ளது.
English Summary
He threatened give evidence Bill Gates caught Epstein clutches world richest man admits 3 secret relationships