'எங்க உங்க அப்பாவையே காணோம்'...! - விஜய் எய்த கூர்மையான அம்புக்கு சுடச்சுட பதிலடி கொடுத்த மு.க.ஸ்டாலின்....! - Seithipunal
Seithipunal


தமிழக சட்டசபையில் ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் மீதான விவாதத்திற்கு பதிலளித்து பேசிய முதல்-அமைச்சர் விஜய், தனது உரையின் போது கூறிய குட்டிக்கதை அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாக மாறியுள்ளது.அவர் கூறிய அந்த குட்டிக்கதையில், ஒரு கிராமத்தில் வெயில் கடுமையாக இருந்ததால், ஒருவர் கண்ணுக்கு மேல் கையை வைத்தபடி யாரையோ தேடிக்கொண்டிருந்தாராம்.

அதை கவனித்த சிறுவன் ஒருவர், “என்ன தேடுகிறீர்கள்?” என்று கேட்டதாகவும், அதற்கு அந்த பெரியவர், “உங்க அப்பா இங்கதான் இருப்பார்னு சொன்னாங்க… அதான் தேடிட்டு இருக்கேன்; ஆனா எங்க பார்த்தாலும் காணவே முடியல” என்று பதிலளித்ததாகவும் சிரிப்பூட்டும் வகையில் தெரிவித்தார்.

இந்தக் கருத்து அரசியல் விமர்சனமாக பார்க்கப்பட்ட நிலையில், அதற்கு திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் திடுக்கிடும் பதிலடி கொடுத்துள்ளார்.திருவாரூரில் நடைபெற்ற முன்னாள் அமைச்சர் மதிவாணன் இல்ல திருமண விழாவில் உரையாற்றிய மு.க. ஸ்டாலின், முதல்-அமைச்சர் விஜய்யின் விமர்சனத்திற்கு நேரடியாக பதிலளித்தார்.

அவர் பேசியதாவது,"எங்க உங்க அப்பாவைக் காணோம் என்று முதல்-அமைச்சர் விஜய் கூறியிருக்கிறார். நான் சட்டமன்றத்தில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், என்றும் மக்கள் மனங்களில் நிலைத்து நிற்பவன்.என்னை நீங்கள் தேடும் இடத்தில் காண முடியாது. மக்கள் தேடும் இடமெல்லாம் நான் இருப்பேன்.

மக்களின் நம்பிக்கையிலும், அவர்களின் இதயத்திலும் நான் என்றைக்கும் இடம்பிடித்திருக்கிறேன்.கோட்டையில் இருக்கும் ஒவ்வொரு மக்கள் நல கோப்புகளிலும் என் கையெழுத்து இருக்கும். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்ட கோப்பில் மு.க. ஸ்டாலின் என்ற கையெழுத்தை பார்க்கலாம்.

அங்கே நான் இருப்பேன்.புதுமைப்பெண் திட்டம், தமிழ்ப்புதல்வன் திட்டம் உள்ளிட்ட பல நலத்திட்டங்களின் பின்னாலும் இந்த ஸ்டாலின் இருப்பான். கோட்டையிலும் இருப்பேன், ஆட்சியிலும் இருப்பேன், மக்கள் நலத் திட்டங்களிலும் இருப்பேன்.மகளிர் உரிமைத் தொகை திட்டம் தொடரும் வரை, மக்களின் வாழ்வில் இந்த ஸ்டாலினின் பெயரும் தொடர்ந்தே இருக்கும்.

நான் அரசியலுக்கு வந்து சுமார் 60 ஆண்டுகளாகிறது. இந்த நீண்ட பயணத்தில், மக்கள் நலனுக்காகவே உழைத்திருக்கிறேன். நான் முதல்-அமைச்சராக இருந்த காலத்தில் செய்த பணிகளைப் போல யாரும் செய்திருக்க முடியாது.இன்று தமிழ்நாடு பல்வேறு சவால்களை எதிர்கொள்கிறது.

ஒரு புறம் மின்வெட்டு பிரச்சினை, மறுபுறம் விவசாயிகளுக்கு தண்ணீர் திறக்கப்படாத நிலை. ஆனால் திமுக ஆட்சியில் ஒவ்வொரு ஆண்டும் விவசாயிகளுக்குத் தேவையான நேரத்தில் தண்ணீர் திறந்து விடப்பட்டது. அதுவே எங்கள் நிர்வாகத்தின் அடையாளம்.ஆட்சியில் இருந்தாலும் இல்லாவிட்டாலும், மக்கள் பணியில் முதல் வரிசையில் நிற்பவர்கள் திமுகவினர் மட்டுமே.

கூட்டணியில் உள்ள சில கட்சிகள் தாமாகவே விலகிச் செல்கின்றன. அதேசமயம், திமுக நிர்வாகிகள் பலரும் கூட்டணி தேவையில்லை என்ற கருத்தை முன்வைக்கின்றனர். அதை நாங்கள் விரைவில் பரிசீலிப்போம்… பரிசீலிப்போம்… பரிசீலிப்போம்".இவ்வாறு மு.க. ஸ்டாலின் அதிரடியாக பதிலளித்தார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

We not see your father anywhere MK Stalin responded Vijay sharp arrow


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...


செய்திகள்



Seithipunal
--> -->