தலைநகர் டெல்லியில் பரபரப்பு; மெட்ரோ ரெயில் உள்ளிட்ட முக்கிய இடங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல்; பாதுகாப்பு அதிகரிப்பு..! - Seithipunal
Seithipunal


தலைநகர் டெல்லியில் உள்ள முக்கியமான இடங்களுக்கு அடிக்கடி வெடிகுண்டு மிரட்டல் வருவதுண்டு. உடனடியாக போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை மேற்கொள்வர். அதன் பிறகு அது புரளி எனத் தெரியவரும். இருப்பினும் ஒவ்வொரு முறையும் புரளி வந்தாலும்,   பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

அதன்படி, இன்று காலை பல்வேறு தலைநகரில் கல்வி நிறுவனங்கள், டெல்லி தலைமைச் செயலகம், டெல்லி சட்டசபை, செங்கோட்டை, இரண்டு பள்ளிகள் ஆகியவற்றிற்கு இ-மெயில் மூலம் வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது. பின்னர் இதுவும் புரளி எனத் தெரிய வந்தது.

ஆனால், அதனைத் தொடர்ந்து டெல்லி மெட்ரோ ரெயில் நிலையங்களுக்கும் மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனால் அனைத்து மெட்ரோ ரெயில் நிலையங்களிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டதோடு, கூடுதல் படைகள் பாதுகாப்பிற்காக குவிக்கப்பட்டுள்ளது.

போது  முக்கியமான இடங்களில் வெடிகுண்டு நிபுணர்கள், மோப்ப நாய்களுடன் சோதனை மேற்கொண்டனர். இதனால் டெல்லியின் முக்கியமான இடங்கள் இன்று பரபரப்பான சூழல் நிலவியது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Bomb threat to important places including Metro Rail in capital Delhi


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




சினிமா

Seithipunal
--> -->