சூப்பர் 8 சுற்று: ஜிம்பாப்வே அணியை 147 ரன்களுக்குள் சுருட்டிய வெஸ்ட் இண்டீஸ், 107 ரன்களில் அபார வெற்றி..! - Seithipunal
Seithipunal


டி20 உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரில் சூப்பர் 8 சுற்று போட்டியில் 04-வது போட்டி இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்றது. இதில், குரூப் 1-இல் இடம் பிடித்துள்ள வெஸ்ட் இண்டீஸ்- ஜிம்பாப்வே அணிகள் மோதின. ஆட்டத்தில் டாஸ் வென்ற ஜிம்பாப்வே பந்து வீச்சை தேர்வு செய்தது.

அதன்படி முதலில் களம் இறங்கிய வெஸ்ட் இண்டீஸ் 20 ஓவரில் 06 விக்கெட் இழப்பிற்கு 254 ரன்கள் என்ற இமாலய ரன்களை குவித்தது.

வெஸ்ட் இண்டீஸ் அணியின் தொடக்க வீரர்களாக கிங் மற்றும் சாய் ஹோப் களமிறங்கிய நிலையில், கிங் 09 ரன்னிலும் ஹோப் 14 ரன்னிலும் ஆட்டமிழந்தனர். அதனை தொடர்ந்து வந்த சிம்ரன் ஹெட்மயர் மற்றும் பவல் ஆகியோர் ஜோடி சேர்ந்து வான வேடிக்கை காட்டினர்.

 இதில், அதிரடியாக விளையாடிய ஹெட்மயர் 19 பந்தில் அரைசதம் விளாசினார். இதன்மூலம் டி20 உலகக் கோப்பை வரலாற்றில் குறைந்த பந்தில் அரை சதம் விளாசிய வெஸ்ட் இண்டீஸ் வீரரான கிறிஸ் கெயில் சாதனையை முறியடித்துள்ளார்.

கிறிஸ் கெயில் 20 பந்தில் அரைசதம் அடித்திருந்த நிலையில் இன்று ஜிம்பாப்வே அணிக்கு எதிராக ஹெட்மயர் 19 பந்தில் அரை சதம் அடித்து சாதனை படைத்துள்ளார். குறைந்த பந்தில் அரை சதம் விளாசிய வீரர்களில் ஒட்டுமொத்தமாக 08-வது வீரர் என்ற சாதனையையும் படைத்துள்ளார்.

தொடர்ந்து அதிரடி காட்டிய ஹெட்மயர் 34, பந்துகளில், 85 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். மறுபுறம் பவல் 35 பந்துகளில் 59 ரன்கள், செப்பர்ட் 21 ரன்கள் என ஆட்டமிழந்தனர். ரத்தபோர்ட் ஆட்டமிழக்காமல் 31, ஜேஸன் ஹோல்டர் 21 ரன்கள் என ஆட்டமிழக்காமல் களத்தில் இருந்தனர்.

பின்னர் 255 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற இலக்குடன் ஜிம்பாப்வே அணி களம் இறங்கியது. ஆனால், வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்து வீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 147 ரன்களில் சகல விக்கெட்டுகளை இழந்தது.

இதனால் வெஸ்ட் இண்டீஸ் 107 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது. இறுதி விக்கெட்டுக்காக களமிறங்கிய பிராட் எவன்ஸ் 21 பந்தில் 43 ரன்கள் விளாசி ஆறுதல் கொடுத்தார். அணியின் சார்பில், தியோன் மையர்ஸ் 28 ரன்கள் சேர்த்தார். கேப்டன் சிகந்தர் ரசா 27 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.

வெஸ்ட் இண்டீஸ் அணி சார்பில் குடகேஷ் மொய்தி 04 விக்கெட்டுகளையும், அகீல் ஹொசைன் 03 விக்கெட்டுகள் வீழ்த்தினர்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

West Indies beat Zimbabwe by 107 runs in Super 8 roun


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




சினிமா

Seithipunal
--> -->