முதல்வர் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம்; புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல்..! - Seithipunal
Seithipunal


இன்று முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு தலைமை செயலகத்தில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 

அதன்படி, தமிழ்நாட்டில் புதிதாக நிறுவப்படவுள்ள மற்றும் விரிவாக்கம் செய்யப்படவுள்ள 46 திட்டங்களுக்கு ஊக்கச்சலுகைகள் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 

இத்திட்டங்களினால் ரூ.31,592.39 கோடி முதலீடு உறுதியளிக்கப்பட்டுள்ளதுடன், 61,521 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

அத்துடன், மகளிர் உரிமைத் தொகை பெற்று வரும் மகளிருக்கான கோடை கால சிறப்புத் தொகையுடன் சேர்த்து ரூ. 5000 வரவு வைக்கப்பட்டுள்ளதற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Cabinet meeting approves new industrial investments


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




சினிமா

Seithipunal
--> -->