வடக் கொரிய தலைவர் கிம் ஜாங் உன் மீண்டும் தொழிலாளர் கட்சியின் பொதுச்செயலாளராக தேர்வு..!
North Korean leader Kim Jong Un re elected as General Secretary of the Workers Party
வடக் கொரிய தலைவர் கிம் ஜாங் உன், ஆளும் தொழிலாளர் கட்சியின் பொதுச் செயலாளராக மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். நேற்று நடைபெற்ற தொழிலாளர் கட்சியின் 09-வது மாநாட்டில் கிம் ஜாங் உன் ஒருமனதாக மீண்டும் அக்கட்சியின் பொதுச் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கிம் ஜாங் உன்னின் தந்தையான கிம் ஜாங் இல் காலத்தில் இந்த மாநாடு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த நிலையில், கடந்த 2016-இல் மீண்டும் தொடங்கப்பட்டது. இம்மாநாட்டில் பேசிய கிம் ஜாங், கடந்த ஐந்து ஆண்டுகளில் நாடு கடுமையான பொருளாதாரத் தடைகளையும் தட்டுப்பாடுகளையும் முறியடித்து, பொருளாதார ரீதியாக பெரும் முன்னேற்றம் கண்டுள்ளதாக தெரவித்துள்ளார்.

அத்துடன், மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவது மற்றும் பொருளாதாரக் கட்டுமானத்தை விரைவுபடுத்துவது கட்சியின் கடமை எனவும் தெரிவித்துள்ளார்.
கிம் ஜாங் உன்னின் மகளான கிம் ஜு ஆய், அடுத்த அரசியல் வாரிசாக உருவெடுத்து வருவதாக தென்கொரிய உளவுத்துறை குறிப்பிட்டுள்ளார். கடந்த சில நாட்களாகவே அவர் தனது தந்தையுடன் பல முக்கிய பொது நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
English Summary
North Korean leader Kim Jong Un re elected as General Secretary of the Workers Party