'ராவண மவன்டா.. ஒத்தையில் நிக்கிற எமன்டா..' தெறிக்கவிடும் 'ஜனநாயகன்' நான்காவது பாடல்..!
The fourth song from Jananaayagan has been released
ஹெச். வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள படம் 'ஜன நாயகன். 2026 பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 09-ந்தேதி உலகமெங்கும் வெளியாகவுள்ளது. விஜய் அரசியல் கட்சி தொடங்கி வரும் சட்டமன்ற தேர்தலில் களமிறங்கவுள்ளார். இதனால், 'ஜன நாயகன்' தான் விஜய்யின் கடைசி படம் என்று கூறப்படுவதால் இப்படத்தின் மீதான ஆர்வம் ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.
அண்மையில் படத்தின் இசை வெளியீட்டு விழா மலேசியாவில் கோலாகலமாக நடந்து முடிந்தது. அங்கு 85 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ரசிகர்கள் ஒன்று கூடி அவருக்கு தளபதி திருவிழா என்று பிரியாவிடை செய்தனர்.
இந்நிலையில், 'ஜன நாயகன்' திரையரங்குகளில் வெளியாகும் தேதி நெருங்கி வரும் நிலையில், ரசிகர்களுக்கு அடுத்தடுத்த அப்டேட்டுகளை படக்குழு வெளியிட்டு உற்சாகப்படுத்தி வருகிறது. அதன்படி, 'ஜன நாயகன்' படத்தின் டிரெய்லர் ஜனவரி 03 ஆம் தேதி (நாளை) மாலை 06.45 மணிக்கு வெளியாகும் என படக்குழு போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது.
இந்நிலையில் இன்று படத்தின் நான்காவது பாடலான 'ராவண மவன்டா' பாடலை வெளியிட்டுள்ளது. ஏற்கனவே, ஜன நாயகன் படத்தில் இருந்து 'தளபதி கச்சேரி', 'ஒரே பேரே வரலாறு', 'செல்ல மகளே' ஆகிய மூன்று பாடல்கள் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்த நிலையில் இன்று நான்காவது பாடல் வெளியாகியுள்ளது.
English Summary
The fourth song from Jananaayagan has been released