சென்னை அணியின் போட்டிகள் ராஞ்சி மைதானத்திற்கு மாற்றம்..? முதல் போட்டியில் களமிறங்கும் CSK Vs RCB ..?
CSK matches shifted to Ranchi stadium
19-வது ஐ.பி.எல். கிரிக்கெட் தொடர் வருகிற 28-ந் தேதி முதல் மே 31-ந் தேதி வரை நாட்டின் முக்கிய நகரங்களில் நடைபெறவுள்ளது. தமிழ்நாடு, மேற்கு வங்காளம், கேரளா, அசாம், புதுச்சேரி ஆகிய 05 மாநிலங்களில் சட்டசபை சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ளதால் ஐ.பி.எல். அட்டவணை வெளியிடுவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.
இந்த நிலையில் நாளை ஐ.பி.எல். போட்டிக்கான முதல்கட்ட அட்டவணை (முதல் 20 போட்டிகள்) நாளை (12-ந்தேதி) அறிவிக்கப்பட உள்ளது. இதனிடையே தேர்தல் காரணமாக சிஎஸ்கே அணியின் போட்டிகள் ராஞ்சி மைதானத்திற்கு மாற்றப்படும் என தகவல் வெளியாகியுள்ள நிலையில், சென்னை அணியின் ரசிகர்கள் வருத்தம் அடைந்தனர்.

ஆனால், சிஎஸ்கே அணியின் போட்டிகள் ராஞ்சி மைதானத்திற்கு மாற்றப்படும் என்ற தகவல் உண்மையில்லை எனவும் அப்படி எந்த வழிகாட்டுதலையும் ஐபிஎல் நிர்வாகம் எங்களுக்கு கொடுக்கவில்லை என்று சிஎஸ்கே அணியின் CEO காசி விஸ்வநாதன் தெரிவித்த்துள்ளார். இதனால் சென்னை அணியின் அணியின் ரசிகர்கள் உற்சாகம் அடைந்துள்ளனர்.
இந்த ஐ.பி.எல் தொடரின் முதல் போட்டி, பெங்களூரு சின்னசாமி மைதானத்தில் மார்ச் 28-ஆம் தேதி நடைபெறவுள்ளள நிலையில், இந்த தொடரின் முதல் போட்டியில் நடப்பு சாம்பியன் பெங்களூரு அணியுடன் சென்னை அணி மோதவுள்ளதாக கூறப்படுகிறது.
அடுத்த நாள் 29-ஆம் தேதி பஞ்சாப் முல்லான்பூரில் நடைபெறும் 02 ஆவது போட்டியில் பஞ்சாப் - குஜராத் அணிகள் மோதவுள்ளதாகவும் கூறப்படுகிறது.
English Summary
CSK matches shifted to Ranchi stadium