தமிழ்நாட்டிற்கான 05 புதிய ரெயில் சேவைகளை தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி..! - Seithipunal
Seithipunal


தேசிய ஜனநாயக கூட்டணியின் பிரசார பொதுக்கூட்டம் இன்று திருச்சியில் நடைபெற்று வருகிறது. இதில் தமிழகத்தில் மூன்றாவது முறையாக பிரதமர் மோடி கலந்து கொண்டுள்ள இந்த கூட்டத்தில் கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்றுள்ளனர்.

இதற்காக, திருச்சி பஞ்சப்பூரில் இடம் தேர்வு செய்யப்பட்டு 30 ஏக்கர் பரப்பளவில் பிரமாண்ட மேடை மற்றும் திடல் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பிரசார பொதுக் கூட்டத்திற்கு முன்பாக அதே பகுதியில் மத்திய அரசு விழாவும் நடக்கிறது.

இந்த மத்திய அரசு விழாவில் பங்கேற்கும் பிரதமர் மோடி தமிழ்நாட்டிற்கான 05 புதிய ரெயில் சேவைகளை தொடங்கி வைத்தார். அந்த வகையில், ரெயில் பயணிகள் வசதிக்காக 02 அம்ரித் பாரத் ரெயில்கள், 02 விரைவு ரெயில்கள், ஒரு பயணிகள் ரெயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார்.

அந்த வகையில், ரெயில் பயணிகள் வசதிக்காக 02 அம்ரித் பாரத் ரெயில்கள், 02 விரைவு ரெயில்கள், ஒரு பயணிகள் ரெயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார்.

அடுத்ததாக நாகர்கோவில்-சாரளப்பள்ளி மற்றும் கோவை-தன்பாத் ஆகிய 02 அம்ரித் பாரத் ரெயில் சேவைகளையும் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

மேலும், நெல்லை- மங்களூரு எக்ஸ்பிரஸ், ராமேஸ்வரம்- மங்களூரு எக்ஸ்பிரஸ், மயிலாடுதுறை- காரைக்குடி, நாகர்கோவில்- சாரளப்பள்ளி ஆகிய ரெயில் சேவைகளை பிரதமர் மோடி தொடங்கி வைத்துள்ளார்.
 


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Prime Minister Modi launched 05 new train services for Tamil Nadu


கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!



Advertisement

கருத்துக் கணிப்பு

தேமுதிக - திமுக கூட்டணியால் யாருக்கு பாதிப்பு!




Seithipunal
--> -->