பக்ரீத் பண்டிகை; தொடர் விடுமுறையை முன்னிட்டு 5 ஆயிரம் சிறப்புப் பேருந்துகள் இயக்கம்; போக்குவரத்துக் கழகம் அறிவிப்பு..! - Seithipunal
Seithipunal


வரும் 28-ஆம் தேதி பக்ரீத் பண்டிகை கொண்டாடப்படவுள்ளது. பக்ரீத் பண்டிகை வியாழக்கிழமை வருவதால் தொடர் விடுமுறை வருகிறது. இதனை முன்னிட்டு, சென்னையில் இருந்து இதர இடங்களுக்கும், பிற இடங்களில் இருந்து தமிழகம் முழுவதும் பயணம் மேற்கொள்ள 05 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறப்புப் பேருந்துகள் இன்று முதல் இயக்கப்படுகின்றன.

அதன்படி, சென்னை கிளாம்பாக்கத்தில் இருந்து திருச்சி, கும்பகோணம், மதுரை, நெல்லை, நாகர்கோவில், கன்னியாகுமரி, தூத்துக்குடி, கோவை, சேலம் உள்ளிட்ட இடங்களுக்கு இன்று 475 பேருந்துகளும், நாளை 845 பேருந்துகளும் இயக்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேப்போன்று, வரும் வியாழன், வெள்ளி மற்றும் சனிக்கிழமை ஆகிய நாட்களில் நாள்தோறும் 455 பேருந்துகளும், சென்னை கோயம்பேட்டில் இருந்து திருவண்ணாமலை, நாகை, வேளாங்கண்ணி, ஓசூர், பெங்களூரு ஆகிய இடங்களுக்கு இன்று 80 பேருந்துகளும் இயக்கப்பட்டவையுள்ளன. மேலும், நாளை முதல் 30-ஆம் தேதி வரை நாள்தோறும் 170 பேருந்துகளும் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் தெரிவித்துள்ளது.

மாதவரத்தில் இருந்து இன்று 35 பேருந்துகளும், நாளை முதல் 30 ஆம் தேதி வரை நாள்தோறும் 60 பேருந்துகள் இயக்கப்படும் என்றும் பெங்களூரு, திருப்பூர், ஈரோடு, கோவை ஆகிய இடங்களில் இருந்து பல்வேறு இடங்களுக்கும் 300 சிறப்புப் பேருந்துகள் இயக்கத் திட்டமிடப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேப்போன்று, ஞாயிறன்று சொந்த ஊர்களில் இருந்து சென்னை மற்றும் பெங்களூரு திரும்ப ஏதுவாக, ஆயிரத்து 85 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் எனவும் அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் அறிவித்துள்ளது.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

5000 Special Buses to Operate Ahead of Bakrid Extended Holiday


கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...



Advertisement

கருத்துக் கணிப்பு

டாஸ்மாக் நிர்வாகத்தை முறைப்படுத்தும் தமிழக அரசின் nadavadikkaikal ...




Seithipunal
--> -->