விஜய் வெற்றி பெற்றது எனக்கு இங்கு பிரச்சினையை ஏற்படுத்தி உள்ளது; விஜய் முதலமைச்சர் ஆனது குறித்து பவன் கல்யாண் கருத்து..!
Pawan Kalyan remarks that Vijay success has created problems for him here
தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் முதல் தேர்தலிலையே வெற்றிப்பெற்று முதலமைச்சர் ஆகியுள்ளமை குறித்து, நடிகரும் ஆந்திரா துணை முதலமைச்சருமான பவன் கல்யாண் தெரிவித்துள்ள கருத்துக்கள் வைரலாகியுள்ளது.
நடிகரை இருந்த விஜய் முதல்வராகியுள்ளமை குறித்து, எமது அண்டைய மாநிலமான ஆந்திராவில் முன்னணி நடிகராக இருக்கும் பவன் கல்யாணையும் ஒப்பிட்டு ஏராளமான சமூக வலைதள பதிவுகள் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் முடிவுகளுக்கு பின்பு வெளிவந்த வண்ணம் உள்ளன.
இதனை தொடர்ந்து பவன் கல்யாண் எதிர்ப்பாளர்கள் அவரை நெகட்டிவாக விமர்சிக்கும் வகையில் விஜய் உடன் ஒப்பிட்டு கிண்டலான பதிவுகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்நிலையில், பவன் கல்யாண் தமிழ்நாட்டில் விஜய் வெற்றி பெற்றது எனக்கு இங்கு பிரச்சினையை ஏற்படுத்தி உள்ளது என்று கிண்டலாக குறிப்பிட்டுள்ள வீடியோ வைரலாகியுள்ளது. அத்துடன், கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய பவன் கல்யாண்ம் தமிழக முதலமைச்சர் விஜய் புகழ்ந்தும் வியப்புடனும் பேசியுள்ளார்.
அப்போது அவர், 'தமிழ்நாட்டில் மிக எளிதாக வெற்றி பெற்று ஆட்சிக்கு வந்து விடுகிறார்கள். அது எனக்கு கொஞ்சம் பொறாமையை ஏற்படுத்துகிறது. விஜய் இப்போது முதலமைச்சர் ஆகிவிட்டார். அவருடைய கட்டவுட் மற்றும் படங்கள்தான் எங்கு பார்த்தாலும் காணப்படுகிறது. நானும் பொது வாழ்க்கையில் இங்கு 15 ஆண்டுகளாக ஆந்திரா முழுவதும் அரசியல் பண்றேன். எனக்கு அதுபோன்ற வெற்றி கிடைக்கவில்லை' என்று நகைச்சுவையுடன் குறிப்பிட்டுள்ளார்.
English Summary
Pawan Kalyan remarks that Vijay success has created problems for him here