விஜய் கூட்டணிக்கு வருவாரா? என்ற கேள்விக்கு 'கூட்டணிக்கு கொள்கை அவசியமில்லை' என டிடிவி தினகரன் பதில்..!
TTV Dhinakaran replies that there is no need for a policy for the alliance
திருச்சியில் என்டிஏ பொதுக்கூட்டம் நடைபெறும் இடத்துக்கு அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் வருகைத் தந்தார். அப்போது அவரிடம், விஜய் என்டிஏ கூட்டணியில் இணைகிறாரா? என்ற செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.
அதற்கு அவர், எந்த ஒரு கூட்டணியும் பலப்படுவது சிறப்பாக இருக்கும் என்றுதான் நான் சொல்ல முடியும் என்றும், கட்சிகள் வந்து பலப்படுவது ஒரு சிறப்பான விஷயம் என்று தெரிவித்துள்ளார். அத்துடன், ஏன்.டி.ஏ கூட்டணி பலப்படுவது தமிழ்நாட்டிற்கு நல்லது என்றும், மற்ற முடிவுகளை இபிஎஸ்-ம், டெல்லி தலைவர்களும் பார்த்துக் கொள்வார்கள் என தெரிவித்துள்ளார்.

அத்துடன், பாஜகவை எதிர்க்கும் விஜய், கூட்டணிக்கு வருவாரா? என்றும் கேள்வி எழுப்பினர். அதற்கு கூட்டணி என்பது யார் ஆட்சிக்கு வரவேண்டும்...? யார் வரக்கூடாது என்பதை தீர்மானிப்பதற்காகத்தான். ஒரே கொள்கையை கொண்டவர்கள்தான் கூட்டணியில் இருக்கவேண்டும் என்பது அவசியமில்லை என்று தெரிவித்துள்ளார்.
மேலும், காங்கிரஸ் - கம்யூனிஸ்டு ஒரேக் கூட்டணியில் இல்லையா அதுபோலத்தான் என்று சுட்டிக்காட்டியுள்ளார். அத்துடன், இபிஎஸ் குறித்த கேள்விக்கு ' எங்கள் விருப்பமும் அதிமுக தனிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்க வேண்டும் என்பதுதான். அதிமுக அறுதிப் பெரும்பான்மையுடன் ஆட்சி அமைப்பதுதான் தமிழ்நாட்டிற்கு நல்லது. என்று தெரிவித்துள்ளார்.
English Summary
TTV Dhinakaran replies that there is no need for a policy for the alliance