சலார் படத்தில் ஸ்ருதிஹாசனுக்கு பதில் நான் தான் நடிக்க வேண்டியது..ஓபனாக பேசிய மாளவிகா மோகனன்! - Seithipunal
Seithipunal


நடிகர் பிரபாஸின் ‘தி ராஜாசாப்’ படத்தில் அவருக்கு ஜோடியாக நடித்துள்ள நடிகை மாளவிகா மோகனன், பிரபாஸ் படத்தில் நடிக்க வந்த ஒரு பெரிய வாய்ப்பை தவறவிட்டது குறித்து வெளிப்படையாக பேசியுள்ளார். குறிப்பாக, ‘சலார்’ படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தும் சில காரணங்களால் அதனை ஏற்க முடியவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.

மலையாள திரையுலகின் முன்னணி ஒளிப்பதிவாளரான மோகனனின் மகள் மாளவிகா மோகனன். மலையாள சினிமாவில் அறிமுகமான இவர், தமிழ் சினிமாவில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘பேட்ட’ படத்தின் மூலம் கவனம் பெற்றார். அதனைத் தொடர்ந்து, லோகேஷ் கனகராஜ் இயக்கிய ‘மாஸ்டர்’ படத்தில் விஜய்க்கு ஜோடியாக நடித்ததன் மூலம், கோலிவுட் ரசிகர்களின் கனவுக்கன்னியாகவே மாறினார்.

அதன்பிறகு துல்கர் சல்மான், ரஜினிகாந்த், விஜய், தனுஷ், சியான் விக்ரம், பிரபாஸ் என தொடர்ந்து முன்னணி நட்சத்திரங்களின் படங்களில் நடித்து வரும் மாளவிகா மோகனன், சமூக வலைதளங்களில் பகிரும் கவர்ச்சியான புகைப்படங்களாலும் தனக்கென பெரிய ரசிகர் பட்டாளத்தை உருவாக்கியுள்ளார்.

இந்த நிலையில், வரவிருக்கும் சங்கராந்திக்கு வெளியாக உள்ள பிரபாஸின் ‘தி ராஜாசாப்’ படத்தில் செம்ம கிளாமராக நடித்துள்ள மாளவிகா மோகனன், பிரபாஸுடன் பணியாற்றிய அனுபவம் குறித்தும், மிஸ் ஆன பெரிய வாய்ப்பு குறித்தும் மனம் திறந்து பேசியுள்ளார்.

அவர் கூறுகையில்,“‘தி ராஜாசாப்’ படத்திற்கு முன்னதாகவே பிரபாஸ் படத்தில் நடிக்க எனக்கு வாய்ப்பு வந்தது. ‘மாஸ்டர்’ படத்துக்குப் பிறகு, ‘சலார்’ படத்தில் நடிக்க இயக்குநர் பிரசாந்த் நீல் சார் நேரடியாக என்னை தொடர்பு கொண்டார். ஆனால், அந்த நேரத்தில் சில காரணங்களால் அந்த படத்தில் நடிக்க முடியாமல் போனது. அதன்பிறகு மீண்டும் பிரபாஸ் படத்தில் நடிக்க வாய்ப்பு கிடைத்தது. அதை நான் பெரிய பாக்கியமாக நினைக்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

மாளவிகா மோகனன் ‘சலார்’ படத்தை மறுத்த நிலையில், அந்த படத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் கதாநாயகியாக நடித்தார். அதன்பிறகு, லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்த ‘கூலி’ படத்திலும் ஸ்ருதிஹாசன் நடித்தது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து, “ஒருவேளை மாளவிகா ‘சலார்’ படத்தில் நடித்திருந்தால், ‘கூலி’ பட வாய்ப்பும் அவருக்கே கிடைத்திருக்கும்” என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

மேலும், தனுஷின் ‘மாறன்’ மற்றும் சியான் விக்ரமின் ‘தங்கலான்’ ஆகிய பட வாய்ப்புகள் காரணமாகத்தான் மாளவிகா மோகனன் ‘சலார்’ வாய்ப்பை மிஸ் செய்ததாகவும் சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.

மொத்தத்தில், ‘தி ராஜாசாப்’ படத்தின் மூலம் பிரபாஸ் ரசிகர்களிடமும் தனது இடத்தை உறுதிப்படுத்த மாளவிகா மோகனன் தயாராகி வருகிறார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Malavika Mohanan spoke openly about the role she should have played in the film Salaar instead of Shruti Haasan


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->