பொங்கல் பாக்ஸ் ஆபீஸ் போர்! ‘ஜனநாயகன்’ vs ‘பராசக்தி’ – ரசிகர்களை கவரப் போவது யார்...? - Seithipunal
Seithipunal


தகவல் தொழில்நுட்பம் வளர்ச்சி பெறாத காலங்களில், பொங்கல்–தீபாவளி போன்ற பண்டிகை நாட்களே சினிமாவின் பெரிய திருவிழாவாக இருந்தது. சென்னை முதல் மாவட்ட தலைநகரங்கள் வரை தியேட்டர்கள் களைகட்டும்; ஒரே நாளில் 10 படங்கள் வெளியானாலும் திரையரங்கு பஞ்சம் இருக்காது. மாவட்டங்களில் ஓடிய பிறகே படங்கள் வட்டார தியேட்டர்களை அடையும்.

அந்த காலத்தில் எம்.ஜி.ஆர் – சிவாஜி, ரஜினிகாந்த் – கமல்ஹாசன் போன்ற நட்சத்திர மோதல்கள் பண்டிகை நாட்களில் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தின.ஆனால் இப்போது நிலைமை மாறிவிட்டது.

ஆண்டு முழுவதும் படங்கள் வெளியாகின்றன. 2025-ம் ஆண்டில் மட்டும் சுமார் 280 தமிழ் படங்கள் திரைக்கு வந்துள்ளன. அதில் உண்மையான வணிக வெற்றியை கண்டவை வெறும் 30 படங்களே என்பது கவலைக்கிடமான உண்மை.

இந்த பின்னணியில், 2026 புத்தாண்டின் முதல் பண்டிகையான பொங்கலுக்கு இரண்டு பெரிய படங்கள் நேருக்கு நேர் களமிறங்குகின்றன. விஜய் நடிப்பில் ‘ஜனநாயகன்’ மற்றும் சிவகார்த்திகேயன் நடித்த ‘பராசக்தி’.

அரசியல் பாதையில் அடியெடுத்துள்ள விஜய்க்கு ‘ஜனநாயகன்’ கடைசி படம் என சொல்லப்படுவதால், ரசிகர்களிடையே எதிர்பார்ப்பு உச்சத்தில் உள்ளது. மறுபுறம், 1965-ம் ஆண்டு இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டத்தை மையமாகக் கொண்ட ‘பராசக்தி’யும் வின்டேஜ் ரசிகர்களை கவர தயாராக உள்ளது.

‘ஜனநாயகன்’ – ‘பராசக்தி’… இந்த பொங்கலில் யார் பாக்ஸ் ஆபீஸில் முன்னிலை பெறப்போகிறார்கள் என்ற கேள்வி சினிமா வட்டாரத்தில் சூடுபிடித்துள்ளது. தற்போதைக்கு இளைய தளபதி விஜயின் ‘ஜனநாயகன்’ ரசிகர்கள் மத்தியில் சற்று முன்னிலை வகிப்பதாக பேசப்படுகிறது.
ஜனநாயகன்
நடிப்பு: விஜய் – பூஜா ஹெக்டே | இயக்கம்: எச். வினோத்
இசை: அனிருத் | செலவு: ரூ.300 கோடி
வெளியீடு: ஜனவரி 9 | தியேட்டர்கள்: 500–550
கதை: மக்களுக்கான தலைவரின் பயணம்
பராசக்தி
நடிப்பு: சிவகார்த்திகேயன் – ஸ்ரீலீலா | இயக்கம்: சுதா கொங்கரா
இசை: ஜி.வி. பிரகாஷ் | செலவு: ரூ.250 கோடி
வெளியீடு: ஜனவரி 10 | தியேட்டர்கள்: 400–450
கதை: 1965 இந்தி திணிப்புக்கு எதிரான போராட்டம்


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Pongal Box Office Battle Jananaayagan vs Parasakti Who win over fans


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->