திமுகவின் அன்பழகனையே வீழ்த்தியவரை தூக்கிய தவெக! தவெகவில் இணைந்த அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஜேசிடி பிரபாகர்! யார் இவர்? - Seithipunal
Seithipunal


நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் (தவெக) அரசியல் பிரபலங்களின் இணைவு தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், அதிமுக முன்னாள் எம்எல்ஏ ஜேசிடி பிரபாகர் இன்று தவெகவில் அதிகாரப்பூர்வமாக இணைந்தார். சென்னையில் தவெக தலைவர் விஜயை நேரில் சந்தித்து, அவர் தன்னை கட்சியில் இணைத்துக் கொண்டார்.

சமீபத்தில் ஜேசிடி பிரபாகரின் மகன் அமலன் தவெகவில் இணைந்திருந்த நிலையில், தற்போது தந்தையும் கட்சியில் சேர்ந்திருப்பது அரசியல் வட்டாரங்களில் கவனம் பெற்றுள்ளது. ஏற்கனவே அதிமுக முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் தவெகவில் இணைந்திருந்த சூழலில், ஜேசிடி பிரபாகரின் வருகை கட்சிக்கு கூடுதல் பலம் சேர்க்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

சென்னையை சேர்ந்த ஜேசிடி பிரபாகர், எம்ஜிஆர் காலத்து அரசியல்வாதி ஆவார். அதிமுகவில் அமைப்பு செயலாளராக இருந்த அவர், வில்லிவாக்கம் சட்டமன்ற தொகுதியில் இரண்டு முறை எம்எல்ஏவாக தேர்ந்தெடுக்கப்பட்டவர். குறிப்பாக, 2011ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், திமுக பொதுச்செயலாளராக இருந்த பேராசிரியர் கே.அன்பழகனை 10,782 ஓட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தி, தமிழக அரசியலில் பெரும் கவனம் பெற்றார்.

அதன்பின்னர் 2016ஆம் ஆண்டு கொளத்தூர் தொகுதியில், தற்போதைய முதல்வர் மு.க.ஸ்டாலினை எதிர்த்து போட்டியிட்டு தோல்வியடைந்தார். 2021ஆம் ஆண்டு வில்லிவாக்கம் தொகுதியில் மீண்டும் போட்டியிட்ட அவர், திமுக வேட்பாளர் வெற்றியழகனிடம் தோல்வியடைந்தார். இதனைத் தொடர்ந்து அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஜேசிடி பிரபாகர், ஓ.பன்னீர் செல்வம் அணியில் செயல்பட்டார். பின்னர் ஏற்பட்ட கருத்து வேறுபாட்டால் தனியாக அரசியல் செயல்பாடுகளை முன்னெடுத்து வந்தார்.

இந்த நிலையில், தற்போது விஜய் முன்னிலையில் தவெகவில் அவர் இணைந்திருப்பது, நடிகர் விஜயின் அரசியல் நகர்வுகளில் முக்கிய திருப்பமாக பார்க்கப்படுகிறது. அனுபவமிக்க அரசியல்வாதிகளின் இணைவு, வரும் காலங்களில் தவெகவின் அரசியல் செயல்பாடுகளுக்கு வலு சேர்க்கும் என அரசியல் பார்வையாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Tvk has lifted the one who defeated DMK Anbazhagan Former AIADMK MLA JCT Prabhakar joins Tvk Who is this


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->