இந்தியாவிற்கு இஸ்ரேல் அனுப்பும் SPICE! 1000 அதிநவீன ரவுகணைகளை வாங்க இந்தியா ஒப்பந்தம்!நடுங்கி நிற்கும் சீனா, பாகிஸ்தான்! - Seithipunal
Seithipunal


இந்தியாவின் பாதுகாப்புத் திறனை மேலும் வலுப்படுத்தும் வகையில், இஸ்ரேலிய பாதுகாப்பு நிறுவனம் ரஃபேல் (Rafael Advanced Defense Systems) தயாரிக்கும் அதிநவீன SPICE 1000 வழிகாட்டுதல் ஏவுகணைகளை பெருமளவில் கொள்முதல் செய்ய இந்தியா முடிவு செய்துள்ளது. மொத்தமாக 1000 ஏவுகணைகளை வாங்கும் ஒப்பந்தத்திற்கு இந்தியா ஒப்புதல் வழங்கியுள்ளது.

பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற பாதுகாப்பு கொள்முதல் கவுன்சில் (DAC) கூட்டத்தில், மொத்தம் 8.7 பில்லியன் டாலர் மதிப்பிலான பிரமாண்ட ஆயுத கொள்முதலுக்கு அனுமதி அளிக்கப்பட்டது. இதில், ரஃபேல் நிறுவனத்தின் SPICE 1000 / Light Hail வான்-தரை துல்லிய தாக்குதல் அமைப்புகளும் அடங்கும் என இந்திய ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

SPICE (Smart, Precise Impact, Cost-Effective) என்பது தன்னாட்சி முறையில் செயல்படும், மிக உயர்ந்த துல்லியத்தைக் கொண்ட வான்-தரை ஆயுத அமைப்புகளின் ஒரு குடும்பமாகும். இந்த அமைப்பு சுமார் 100 கிலோமீட்டர் வரம்பைக் கொண்டது. SPICE குடும்பத்தில் மூன்று வகை எடைகளில் குண்டுகள் உள்ள நிலையில், SPICE 1000 சுமார் 500 கிலோ எடையைக் கொண்டதாகும். இந்த முழுமையான அமைப்பு, இஸ்ரேலின் பாதுகாப்புப் பரிசையும் பெற்றுள்ளது.

SPICE ஏவுகணைகளின் முக்கிய தனிச்சிறப்பு, GPS உதவி இல்லாமலேயே இலக்கை கண்டறிந்து தாக்கும் திறன் ஆகும். லேசர் வழிகாட்டும் தலைப்பும், புதுமையான கணித வழிமுறைகளும் இணைந்து செயல்படுவதன் மூலம், இலக்கின் படத்தை நிகழ்நேரத்தில் ஒப்பிட்டு மூன்று மீட்டருக்கும் குறைவான தாக்குதல் துல்லியத்தை உறுதி செய்கிறது.

கடந்த மே மாதம் பாகிஸ்தானுடன் ஏற்பட்ட மோதல், இந்தியாவுக்கு மேம்பட்ட ஆயுதங்களின் அவசியத்தை மீண்டும் எடுத்துக்காட்டியது. இதன் தொடர்ச்சியாக, பாதுகாப்பு ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில், இஸ்ரேல் பாதுகாப்பு அமைச்சகத்தின் இயக்குநர் ஜெனரல் மேஜர் ஜெனரல் (ஓய்வு) அமீர் பரம், இந்திய பிரதிநிதி ராஜேஷ் குமார் சிங் உடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டார்.

ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆய்வு நிறுவனம் (SIPRI) வெளியிட்டுள்ள தகவலின்படி, இஸ்ரேலிய பாதுகாப்புத் துறைகளின் மிகப்பெரிய வாடிக்கையாளராக இந்தியா உள்ளது. 2020–2024 காலகட்டத்தில், இஸ்ரேலின் மொத்த பாதுகாப்பு ஏற்றுமதியில் சுமார் 34% இந்தியாவுக்கே சென்றுள்ளது.

இதற்கிடையில், இந்திய பாதுகாப்பு அமைச்சகத்தின் பிரதிநிதிகள் குழு சமீபத்தில் ரகசியமாக இஸ்ரேலுக்கு சென்றதாக தகவல்கள் வெளியாகின. அந்த பயணத்தின் நோக்கம், IAI நிறுவனத்தின் Air LORA பாலிஸ்டிக் ஏவுகணைகள் மற்றும் ரஃபேலின் Ice Breaker க்ரூஸ் ஏவுகணைகள் ஆகியவற்றை இந்தியா கொள்முதல் செய்யவும், உள்ளூர் உற்பத்தி செய்யவும் ஒப்பந்தம் மேற்கொள்வதே ஆகும்.

ஏற்கனவே இந்திய விமானப்படை பயன்படுத்தும் Rampage ஏவுகணை சுமார் 250 கிலோமீட்டர் வரம்பைக் கொண்டிருந்தாலும், அதன் வரம்பு காரணமாக வான் பாதுகாப்பு அமைப்புகளுக்கு ஆபத்து இருப்பதாக கூறப்படுகிறது. இதற்கு மாற்றாக, Air LORA ஏவுகணை 400 கிலோமீட்டர் வரம்பைக் கொண்டது. இது போர் விமானங்கள் பாதுகாப்பான தூரத்தில் இருந்தே இலக்குகளை தாக்க அனுமதிக்கும். சுமார் 1,600 கிலோ எடையுள்ள, மீயொலி வேகத்தில் பறக்கும் இந்த ஏவுகணை, “ஏவி மறக்கும்” (Fire and Forget) தொழில்நுட்பத்தைக் கொண்டது.

மேலும், ரஃபேலின் Ice Breaker க்ரூஸ் ஏவுகணை மீதும் இந்தியா ஆர்வம் காட்டி வருகிறது. இது 300 கிலோமீட்டர் வரம்பில், தரை மற்றும் கடல் இலக்குகளை அனைத்து வானிலை சூழல்களிலும் தாக்கும் திறன் கொண்டது. மின்னணுப் போர் நிறைந்த சூழல்களிலும் செயல்படும் இந்த ஏவுகணை, செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான IIR வழிசெலுத்தல் தொழில்நுட்பத்தை பயன்படுத்துகிறது.

மொத்தத்தில், ரஃபேல் நிறுவனத்தின் இந்த அதிநவீன ஏவுகணை கொள்முதல், இந்தியாவின் தாக்குதல் மற்றும் தடுப்பு திறனை புதிய உயரத்திற்கு எடுத்துச் செல்லும் முக்கிய நடவடிக்கையாக பாதுகாப்பு நிபுணர்கள் மதிப்பிடுகின்றனர்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

Israel to send SPICE to India India signs deal to buy 1000 advanced missiles China and Pakistan are trembling


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->