காதலனுடன் நெருக்கமான புகைப்படம் வெளியிட்ட பிரியா பவானி சங்கர் – வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி
Priya Bhavani Shankar posts intimate photo with boyfriend puts an end to rumors
நடிகை பிரியா பவானி சங்கர், நீண்ட இடைவெளிக்குப் பிறகு தனது காதலருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளங்களில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி, ரசிகர்களின் கவனத்தை பெரிதும் ஈர்த்துள்ளது. இதன் மூலம், அவரைச் சுற்றி நீண்ட காலமாக நிலவி வந்த காதல் வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டுள்ளதாக ரசிகர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
செய்தி வாசிப்பாளராக தனது ஊடக பயணத்தை தொடங்கிய பிரியா பவானி சங்கர், விஜய் டிவியில் ஒளிபரப்பான ‘கல்யாணம் முதல் காதல் வரை’ என்ற சீரியல் மூலம் சின்னத்திரை ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றார். எளிமையான நடிப்பால் தனக்கென ஒரு ரசிகர் வட்டத்தை உருவாக்கிய அவர், பின்னர் ‘மேயாத மான்’ திரைப்படத்தின் மூலம் வெள்ளித்திரையில் அறிமுகமானார். அந்தப் படம் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, ‘கடைக்குட்டி சிங்கம்’, ‘மான்ஸ்டர்’ உள்ளிட்ட பல படங்களில் நடித்தார்.
குறுகிய காலத்திலேயே தயாரிப்பாளர்களின் கவனத்தை ஈர்த்த நடிகையாக மாறிய பிரியா பவானி சங்கர், யானை, குருதி ஆட்டம், பத்து தல, திருச்சிற்றம்பலம், இந்தியன் 2 போன்ற படங்களில் முன்னணி நடிகர்களுடன் நடித்துள்ளார். கடந்த ஆண்டு அருள்நிதியுடன் இணைந்து, இயக்குநர் அஜய் ஞானமுத்து இயக்கிய ‘டிமான்டி காலனி 2’ படத்தில் நடித்த அவர், அந்தப் படத்தின் மாபெரும் வெற்றியால் மீண்டும் கவனம் பெற்றார்.
இந்த நிலையில், ‘டிமான்டி காலனி 3’ படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் சமீபத்தில் வெளியிடப்பட்டு, ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளது. இந்தப் படம் ஏப்ரல் மாதம் தமிழ் புத்தாண்டு அன்று வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம், பிரியா பவானி சங்கர் மீண்டும் ஒரு வெற்றிப் பயணத்தை தொடங்குவார் என சினிமா வட்டாரங்கள் நம்புகின்றன.
இந்நிலையில், பிரியா பவானி சங்கரின் காதலர் ராஜவேல், அவருடன் கன்னத்தோடு கன்னம் வைத்து இருக்கும் புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பகிர்ந்து, பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த பதிவில்,“எனக்கு தெரிந்தவரை மிகவும் வேடிக்கையானவள் நீ தான். உன் கதைகளைக் கேட்டுச் சிரித்துக்கொண்டே உறங்குவதற்கும், அந்த அமைதியான முகத்தைப் பார்த்து விழிப்பதற்கும் நான் அதிர்ஷ்டசாலி. இத்தனை வருடங்கள் கடந்தும், நீ எல்லாவற்றையும் எளிதாகவும் சுவாரஸ்யமாகவும் வைத்திருக்கிறாய்” என்று உருகி உருகி காதல் வார்த்தைகளை பகிர்ந்துள்ளார்.
இந்த பதிவு தற்போது இணையத்தில் டிரெண்டாகி வரும் நிலையில், ரசிகர்கள் மற்றும் திரையுலக பிரபலங்கள் பலரும் இந்த காதல் ஜோடிக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
English Summary
Priya Bhavani Shankar posts intimate photo with boyfriend puts an end to rumors