புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகிறதா...? தமிழ்நாட்டில் மழை மீண்டும் தொடங்குமா...? - Seithipunal
Seithipunal


தமிழகத்தின் பல்வேறு பகுதிகள் மற்றும் இலங்கைக்கு அப்பால் உள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவி வரும் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி தாக்கம் காரணமாக, மேற்கு தொடர்ச்சி மலை மாவட்டங்களைச் சேர்த்து தமிழகத்தின் சில இடங்களில் கடந்த இரண்டு நாட்களாக இடைவிடாது மழை பெய்து வருகிறது.

இந்த வானிலை மாற்றத்தின் தொடர்ச்சியாக, இன்றும் (சனிக்கிழமை) மேற்சொன்ன பகுதிகளில் மழை பெய்யக்கூடும் என தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார்.

இதற்கிடையே, வருகிற 9-ந் தேதி வரை தமிழகத்தில் மழை குறையும் என்றும், பகல் நேரங்களில் வெப்பம் அதிகரித்து, இரவுகளில் குளிர்ச்சியான வானிலை நிலவும் என்றும் அவர் விளக்கினார்.

இந்த காலகட்டத்தை பயன்படுத்தி விவசாயிகள் வேளாண் பணிகளில் தீவிரமாக ஈடுபடலாம் என்றும் அறிவுறுத்தினார்.இந்நிலையில், வருகிற 10-ந் தேதி இலங்கையை ஒட்டிய தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளில் புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகும் வாய்ப்பு இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த புதிய அமைப்பின் தாக்கத்தால் 10, 11, 12-ந் தேதிகளில் கடலோர மாவட்டங்கள் முதல் உள் மாவட்டங்கள் வரை, ஒட்டுமொத்த தமிழகத்திலும் பரவலான மழை பெய்யக்கூடும் என ஹேமச்சந்தர் மேலும் தெரிவித்துள்ளார்.


இதுபோன்ற செய்திகளை உடனுக்குடன் உங்கள் வாட்ஸாப்பில் பெறுவதற்கு, எங்கள் வாட்ஸாப் சேனலை பின்தொடரவும்... https://whatsapp.com/channel/0029Va56Sr94Y9ltw5vAiI1S


English Summary

new low pressure area forming Will rainfall resume Tamil Nadu


கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?



Advertisement

கருத்துக் கணிப்பு

காங்கிரஸ் திடீரென ஆட்சியில் பங்கு கேட்பது கூட்டணி மாறும் கணக்கா..?




Seithipunal
--> -->